Latest News :

பாலிவுட்டில் சாதனை படைத்த லிங்குசாமியின் ‘தி வாரியர்’
Friday January-28 2022

தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நடிகரான ராம் பொத்தினேனி முதன் முறையாக தமிழின் பிரபல இயக்குநருடன் இணைந்துள்ளதால் ‘தி வாரியர்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் மூலம் ராம் பொத்தினேனின் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதும் ஒரு காரணமாகும்.

 

இந்த நிலையில், இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை மட்டும் ரூ.16 கோடிக்கு விற்பனையாகி பாலிவுட்டில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை சமீபத்தில் தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். அந்த போஸ்டரில் போலீஸ் அதிகாரியாக தோற்றமளிக்கும் ராம் பொதினேனி தனது போலீஸ் குழுவுடன் ஒரு முக்கியமான மிஷனுக்கு திட்டமிடுகிறார். தி வாரியர் திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு அதிரடி விருந்தாக இருக்கும் என்று திரை வட்டாரங்கள் கூறுகின்றன.

 

இயக்குநர் லிங்குசாமி தனது ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படங்களுக்காக பெயர் பெற்றவர் என்பதாலும், நடிகர் ராம் சிறந்த படங்களை கொடுப்பதில் அர்ப்பணிப்புடன் இருப்பவர் என்பதாலும்,  இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் இணைந்து நடிக்கிறது.  கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும், அக்ஷரா கவுடா ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், ஆதி பினிசெட்டி வில்லனாகவும்  நடிக்கின்றனர்.

 

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி பிரமாண்ட  பட்ஜெட்டில் தயாரிக்கும் தி வாரியர் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பவன்குமார் இப்படத்தை வழங்கவுள்ளார். 

Related News

8011

விக்ரமின் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Thursday January-23 2025

இயக்குநர்  எஸ் . யூ.  அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...

’ஆஃபிஸ்’ தொடரின் தலைப்பு பாடலை வெளியிட்ட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!
Thursday January-23 2025

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின்  டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...

அரசியல் ஆன்மீகம் சினிமா! - கவனம் ஈர்க்கும் நடிகர் மை. பா. நாராயணன்
Tuesday January-21 2025

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...

Recent Gallery