’திருட்டு பயலே 2’ படத்திற்குப் பிறகு இயக்குநர் சுசி கணேசன் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. ’வஞ்சம் தீர்த்தாயடா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை 4வி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் இயக்குநர் சுசி கணேசனின் மனைவி மஞ்சரி தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே இந்தியில் இரண்டு திரைப்படங்களை தயாரித்திருக்கிறார், தமிழில் தயாரிப்பாளராக இது தான் இவருக்கு முதல் திரைப்படம்.
இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் இரண்டு நாயகர்கள் நடிக்கிறார்கள். இதில் ஒருவர் பிரபல நடிகர். மற்றவர் புதுமுகம். அந்த புதுமுகத்தை தேர்வு செய்வதிலும் இயக்குநர் சுசி கணேசன் வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி ‘வருங்கால சூப்பர் ஸ்டார் 2022’ என்ற தலைப்பில் திறமையை தேடும் நிகழ்ச்சி ஒன்றை பிரபல தொலைக்காட்சியில் நடத்த இருக்கிறார். இதில் நடிப்பு ஆர்வம் உள்ள 20 வயது முதல் 45 வயதுள்ளவர்கள் கலந்துக்கொண்டு தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தலாம். போட்டியின் இறுதியில் வெற்றி பெறுபவர் ’வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தில் நடிக்க இருக்கும் அறிமுக நாயகர் ஆவார்.
இதற்கான அறிவிப்பை இன்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்ட இயக்குநர் சுசி கணேசன் மற்றும் தயாரிப்பாளர் மஞ்சரி சுசி கணேசன் இந்த ஒரு படத்துடன் இந்த போட்டி நின்றுவிடாமல் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்தி அதன் மூலம் ஒருவரை தேர்வு செய்து ஹீரோவாக களம் இறக்க இருப்பதாக தெரிவித்தார்கள்.
சுசி கணேசனின் இந்த திறமைக்கான தேடல் நிகழ்ச்சியில் பங்குபெற விருப்பம் உள்ளவர்கள் www.4vmaxtv.com இணையதளம் அல்லது 4v MAXTV யூ டியூப் சேனல் மூலம் தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் 2 நிமிட வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்த போட்டியில் கலந்துக்கொண்டு இரண்டாவது சுற்றுக்கு தேர்வாகும் போட்டியாளர்களை சென்னையில் தங்க வைத்து நடிப்பு பயிற்சி, உடற்பயிற்சி அளிக்க இருக்கிறார்கள். இதை தொடர்ந்து மூன்றாவது சுற்றுக்கு தேர்வாகும் 12 பேர், 12 வாரங்கள் நடக்கும் ‘வருங்கால சூப்பர் ஸ்டார் 2022’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இந்த 12 பேரில் ஒருவர் தான் சுசி கணேசன் தேடும் அந்த அறிமுக நாயகர் ஆவார்.
இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கும் தொலைக்காட்சி உள்ளிட்ட பல விபரங்களை இரண்டு வாரத்திற்குள் படக்குழு அறிவிக்க உள்ளது.
மேலும், இதே திரைப்படத்தை இந்தியிலும் இயக்க உள்ள சுசி கணேசன், இதற்காக இந்தி தொலைக்காட்சியிலும் ஒரு நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார். இதற்கு ‘கல்கா சூப்பர் ஸ்டார்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரு நிகழ்ச்சிகளையும் ஒரே சமயத்தில் நடத்தாமல், வெவ்வேறு நிகழ்ச்சியாக நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி முதலில் தமிழில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி எதிர்காலத்தில் இந்தியிலும் நடத்தப்பட உள்ளது.
ஏற்கனவே நடிகை சினேகாவை பிரபல வார பத்திரிகை மூலமும், நடிகர் பிரசன்னாவை தொலைக்காட்சி மூலமும் தேர்வு செய்த இயக்குநர் சுசி கணேசன், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தனது ஹீரோவை தேர்வு செய்யும் திட்டம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...