Latest News :

‘கடைசி விவசாயி’ பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலீஸ்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Sunday January-30 2022

’காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடைசி விவசாயி’. நல்லாண்டி என்ற முதியவர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் விவசாயம் மற்றும் விவசாயிகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

 

ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் படங்களில் ஒன்றான இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாரான நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் படத்தின் வெளியீட்டு தள்ளிப்போனது. தற்போது ஓரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்துப்பட்டு வருவதால் பல திரைப்படங்கள் வெளியாக தயாராகி வரும் நிலையில், ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

Kadaisi Vivasayi

 

அதன்படி, ‘கடைசி விவசாயி’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த தகவலை நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட ‘கடைசி விவசாயி’ படக்குழுவினர் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள்.

Related News

8013

விக்ரமின் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Thursday January-23 2025

இயக்குநர்  எஸ் . யூ.  அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...

’ஆஃபிஸ்’ தொடரின் தலைப்பு பாடலை வெளியிட்ட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!
Thursday January-23 2025

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின்  டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...

அரசியல் ஆன்மீகம் சினிமா! - கவனம் ஈர்க்கும் நடிகர் மை. பா. நாராயணன்
Tuesday January-21 2025

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...

Recent Gallery