கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘மாறன்’ திரைப்படம் நேரடியாக ஒடிடி-யில் வெளியாக உள்ளது. இது குறித்து தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தாலும், இன்னும் வெளியீட்டு தேதி அறிவிக்கவில்லை. இதற்கிடையே தனுஷின் விவாகரத்து அறிவிப்பால் ‘மாறன்’ படத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தனுஷ் இன்னும் மாறன் படத்துக்குக் குரல்பதிவு செய்யவில்லையாம். அதனால் படம் முழுமையாகத் தயாராகாமல் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ய இருப்பதாக நடிகர் தனுஷ் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, இது தொடர்பாக தனுஷ் பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதோடு, பல நடிகைகளை அவர் சிதைத்ததாக சோசியல் மீடியாக்களில் தகவல்களும் பரவியது. பிறகு, தனுஷின் தந்தை இயக்குநர் கஸ்தூரி ராஜா, தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சமாதானப்படுத்தும் வேலைகள் தொடங்கியிருக்கின்றது. அவர்கள் பிரிய மாட்டார்கள், ஒன்று சேர்ந்து வாழ்வார்கள், என்று பத்திரிகை மூலம் தகவல் தெரிவித்தார்.
அதே சமயம், ஐஸ்வர்யா தனது இயக்குநர் பணியில் தீவிரம் காட்ட தொடங்கியதோடு, உடனடியாக வீடியோ ஆல்பம் ஒன்றை இயக்கும் பணியிலும் இறங்கிவிட்டார். அதேபோல், ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த தனுஷ், தற்போது சென்னைக்கு வர மறுக்கிறாராம். காரணம், ரஜினி ரசிகர்கள் தன்னை தாக்குவார்கள், என்று அச்சப்படுகிறாராம்.
இந்த நிலையில், ‘மாறன்’ படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்திருக்கும் நிலையில், தனுஷின் குரல் பதிவு பணிகள் பாக்கியுள்ளதாம். படம் இணையத்தில் வெளியாவதால் பொறுமையாக அவருடைய குரல் பதிவை வைத்துக்கொள்ளலாம் என்று தயாரிப்பு தரப்பு நினைத்ததாம். ஆனால், தனுஷால் தற்போது சென்னைக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மாறன் படத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
குரல் பதிவை முடித்த பிறகு வெளியீட்டு தேதியை அறிவிக்க இருந்த ‘மாறன்’ படக்குழு தற்போது தனுஷ் சென்னை வர மறுப்பதால், அவர் இருக்கும் ஐதராபாத்துக்கு சென்று குரல் பதிவு செய்துக்கொள்வதற்கான ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...