மனதை உலுக்கும் பரபரப்பான கதைக்களத்தோடு கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்த ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் இயக்குநர் ஆர்.டி.எம் மற்றும் அப்படத்தின் நாயகன் சுரேஷ் ரவி, அப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் என ஒட்டு மொத்த கூட்டணியும் இரண்டாவது முறையாக கைகோர்த்துள்ளார்கள். சர்ச்சையான கதையை தங்களது முதல் படமாக கொடுத்த இந்த கூட்டணி, தங்களது இரண்டாவது படைப்பை முழுக்க முழுக்க நகைச்சுவை படைப்பாக கொடுக்க உள்ளது.
ஃபிரண்ட்ஷிப் காமெடி என்ற புதுவகை ஜானரில் உருவாக உள்ள இப்படத்திற்கு ‘பி.ஈ.பார்’ (B.E. BAR) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் அரியரை கிளியர் செய்ய படும்பாடுகளை சுற்றி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுரேஷ் ரவி நாயகனாக நடிக்க, நாயகியாக ’சதுரங்க வேட்டை’ புகழ் இஷாரா நாயர் நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், கல்லூரி வினோத், மது, ரேணுகா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
விஷ்ணு ஸ்ரீ கே.எஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆதித்யா மற்றும் சூர்யா இசையமைக்கிறார்கள். வடிவேலு மற்றும் விமல்ராஜ் படத்தொகுப்பு செய்ய, சிவராஜ் கலையை நிர்மாணிக்கிறார். கல்லூரி வினோத் வசனம் எழுத, ஞானகரவேல், கானா பிரபா ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள்.
ஆர்.டி.எம். கதை, திரைக்கதை எழுதி இயக்கும் இப்படத்தை அப்சலியூட் பிக்சர்ஸ் (Absolute Pictures) சார்பில் மால்கம் மற்றும் பி.ஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன், ஒயிட் மூன் டாக்கீஸ் நிறுவனங்கள் சார்பில் பி.பாஸ்கரன், பி.ராஜபாண்டியன், சுரேஷ் ரவி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் முதல் பார்வை விரைவில் வெளியாக உள்ளது.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...