Latest News :

’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Monday January-31 2022

ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் மிக பிரம்மாண்டமான திரைப்படமான ‘ஆர்.ஆர்.ஆர்’-ன் வெளியீடு கொரோனா பரவலால் தள்ளிப்போனது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், புதிய திரைப்படங்களின் வெளியீட்டு தேதிகளை தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியும் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வரும் மார்ச் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதனை படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

 

’பாகுபலி’ படத்திற்குப் பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கியிருக்கும் இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்க, பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான ஆலியா பட், அஜய் தேவுகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.

Related News

8018

விக்ரமின் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Thursday January-23 2025

இயக்குநர்  எஸ் . யூ.  அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...

’ஆஃபிஸ்’ தொடரின் தலைப்பு பாடலை வெளியிட்ட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!
Thursday January-23 2025

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின்  டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...

அரசியல் ஆன்மீகம் சினிமா! - கவனம் ஈர்க்கும் நடிகர் மை. பா. நாராயணன்
Tuesday January-21 2025

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...

Recent Gallery