தமிழ் சினிமாவில் சாதி பிரச்சனைகள் பற்றி பேசும் திரைப்படங்களின் வருகை அதிகரித்திருப்பதோடு, அப்படிப்பட்ட சில படங்களால் பல்வேறு சர்ச்சைகளும் எழுகின்றது. சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில், அப்படி ஒரு சர்ச்சை வெடிக்கும் வகையில் உருவாகியுள்ளது ‘சாயம்’ என்ற திரைப்படம்.
ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சாயம்’. படத்தினை புதுமுக இயக்குநர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி இந்த படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள்ர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார். யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டிரைலர் பலரின் கவனத்தை ஈர்த்ததோடு, பலரது புருவத்தையும் உயர்த்த செய்திருக்கிறது. ஆம், “தாழ்த்தப்பட்ட ஒருவரை தாழ்த்தப்பட்டவர் என்பதற்காகவே கொலை செய்த குற்றத்திற்காக” என்ற வசனத்தோடு இப்படத்தின் டிரைலர் தொடங்குகிறது. இதன் மூலம் ‘ஜெய் பீம்’, ‘பரியேறும் பெருமாள்’ போன்ற படங்களின் வரிசையில் இப்படமும் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருவதோடு, படத்தல் பெரும் சர்ச்சை வெடிக்குமோ, என்ற எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘சாயம்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...