தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான சினேகன், பல வெற்றிப் பாடல்களை எழுதியுள்ளார். சுமார் 2500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கும் சினேகன், திடீரென்று நடிகர் அவதாரம் எடுத்ததால் பாடல் எழுதுவதை குறைத்துக் கொண்டார். ஒன்று இரண்டு படங்களில் நாயகனாக நடித்தவர், தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுவதும் அறியப்பட்ட சினேகன், அப்போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். மேலும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தவர், கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இப்படி பல்வேறு தளங்களில் பயணித்துக்கொண்டிருக்கும் சினேகன், நடிகை கன்னிகாவை காதலித்து கரம் பிடித்தார்.
சினேகன் - கன்னிகா திருமணம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் நடைபெற்றது. கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இந்த நிலையில், திருமணமாகி ஆறு மாதங்கள் ஆன நிலையில் சினேகன், தன் மனைவி கன்னிகாவை பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆம், இதுவரை நடைபெற்றுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களிலும் பங்கேற்ற போட்டியாளர்களை கொண்டு ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை போன்று போட்டியாளர்கள் ஒரு வீட்டில் எந்தவித தொடர்பும் இன்றி இருக்கும் இந்த போட்டியில் சினேகனும் போட்டியாளராக கலந்துக்கொள்கிறார். இதற்காக அவர் தனது மனைவியை பிரிந்து பிக் பாஸ் அல்டிமேட் வீட்டுக்கு செல்கிறார்.
தனது கணவரை பிரியும் கன்னிகா, அவருடைய உடைகளை பேக் செய்யும் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டு தனது உருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...