பல உண்மை சம்பவங்களை விறுவிறுப்பான இணைய தொடர்களாக தயாரித்து வழங்கி வரும் ஜீ5 ஒடிடி தளம், பல வகை கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்கள் மற்றும் இணைய தொடர்களையும் வெளியிட்டு வருகிறது.
‘ஆட்டோ சங்கர்’, ‘பிங்கர் டிப்’, ‘க.பெ.ரணசிங்கம்’, ‘மலேசியா டு அம்னீஷியா’, ‘விநோதய சித்தம்’, ‘பிளட் மணி’ உள்ளிட்ட பல்வேறு ஒரிஜினல் படங்களை வெளியிட்டு ரசிகர்களின் பேவரைட் ஒடிடி தளமாக உருவெடுத்துள்ள ஜீ5 தளத்தின் அடுத்த வெளியீடு ‘விலங்கு’.
விமல், இனியா, முனிஷ்காந்த், பால சரவணன், ஆர்.என்.ஆர்.மனோகர், ரேஷ்மா போன்ற முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில், புலனாய்வு க்ரைம் ஜானர் வெப் தொடராக உருவாகியுள்ள இந்த தொடர் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி ஜீ5-ல் வெளியாகிறது.
ஒரு மர்மமான வழக்கை காவல்துறை அதிகாரியான விமல் விசாரிக்க, அதில் இருக்கும் மர்மங்களும், அதை தொடர்ந்து ஏற்படும் திருப்பங்களையும் விறுவிறுப்பாக சொல்வதோடு, எளிய காவலர்களின் வாழ்க்கையையும், அவர்களின் உணர்வுப்பூர்வமான பக்கத்தையும் இயல்பாக சொல்லியிருக்கிறார்கள்.
7 பகுதிகளை கொண்ட இத்தொடரை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம் சார்பில் மதன் தயாரிக்க, பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். அஜீஷ் இசையமைக்க, கணேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். தினேஷ் புரோஷத்தமன் ஒளிப்பதிவு செய்ய, ஜி.துரைராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...