Latest News :

மனதில் நினைப்பதை அறியும் மாயாஜாலம்! - ‘கூர்மன்’ திரைப்பட விழாவில் நடந்த ஆச்சரியம்
Sunday February-06 2022

எம்.கே.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், பிரையன் பி.ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘கூர்மன்’. சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானர் திரைப்படமான இப்படத்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

பிறர் மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் ஒரு கதாப்பாத்திரத்தை முதன்மை கதாப்பாத்திரமாக கொண்டு வித்தியாசமான முறையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வித்தியாசத்தை வெறும் வார்த்தையால் மட்டுமே சொல்லாமல், படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பலரது கண் முன் செய்து காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது ‘கூர்மன்’ படக்குழு.

 

ஆம், சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில், மனதில் உள்ளதை எப்படி அறிகிறார்கள் என்பதை பார்வையாளர்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர். இதற்காக பார்வையாளர்களில் ஒருவரை அழைத்து அவர் மூலமாகவே மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் நிகழ்வினை செய்துகாட்டினார்கள். இதனை பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். இசை வெளீயீட்டு விழாவையே இப்படி வித்தியாசமாக நடத்தி நிகழ்வுக்கு வந்தவர்களை பேச வைத்திருக்கும் படக்குழு தங்கள் படம் மூலமாகவும் பேச வைப்பார்கள், என்று வந்திருந்த விருந்தினர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

 

நடிகர் ராஜாஜி பேசுகையில், “நன்றி சொல்லும் மேடையாக இதை நினைத்துகொள்கிறேன். MK Entertainment  தயாரிப்பாளர் ‘ தான் மட்டும் நல்லாருக்கனும்னு நினைப்பவர் அல்ல தன்னை சுற்றியிருக்கும் எல்லோரும் நல்லாயிருக்க வேண்டும் என்று நினைப்பவர்’ நான் நன்றாக இருக்க வேண்டுமென இந்தக்கதை கேட்டவுடன் என்னை அழைத்து நடிக்க சொன்னார். சுரேஷ் இப்படத்தில் பெரும் உதவியாக இருந்தார். இப்படத்தில் ஒரு ஜெர்மன் செப்பர்ட் நாய் நன்றாக நடித்துள்ளது அது இப்போது இல்லை என்பது வருத்தமே. பிஜு என்னை முதலில் சந்தித்தபோது ஆடிசன் பண்ணலாம் என்றார் ஒண்ணுல்ல,  இத பண்ணா போதும்னு சொல்லியே தலைகீழாக நிற்க வைத்தார், படத்தில் நன்றாக வேலை வாங்கினார். படத்தை அருமையாக எடுத்துள்ளார். இசையமைப்பாளர் டோனிஜி பின்னணி இசையில் கலக்கியுள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள், இந்தப்படத்தில் கேரக்டர் ரொம்ப முக்கியம் நரேன் சார் நிறைய சொல்லிக்கொடுத்தார். பாலசரவணன் உடன் வேலை செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. முருகானந்தம் இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் எங்கள் படத்திற்கு நேரம் ஒதுக்கி நடித்து தந்தார் என் நெருங்கிய நண்பர். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் ஒரு தரமான படமாக இருக்கும் வெளியீட்டுக்கான வேலைகள் நடந்து வருகிறது. மிகச்சிறந்த படமாக இருக்கும் நீங்கள் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்.” என்றார்.

 

இயக்குநர் பிரையன் பி.ஜார்ஜ் பேசுகையில், “எல்லோரும் இப்படத்தில் அவரவர் வேலையை ஈஸியாக செய்து தந்தார்கள், அதனால் தான் இந்தப்படம் நடந்தது. நான் எதுவும் செய்யவில்லை. ஒரு தயாரிப்பாளர் 40 நிமிடத்தில் இந்தப்படத்தின் கதையை கேட்டு ஓகே சொன்னார். சினிமாவில் அது அவ்வளவு எளிதாக நடக்காது  அதற்காக மதன் சாருக்கு நன்றி. இந்தப்படத்தை சிக்கல் இல்லாமல் உருவாக்க காரணமாக இருந்த சுரேஷ் சாருக்கு நன்றி. நாயகன் ராஜாஜி தலைகீழாக நிற்க வைத்தேன் என்று சொன்னார். ஆனால் நான் என்ன சொன்னாலும் அதை மறுபேச்சில்லாமல் செய்தார். தலைகீழாக நிற்பாரா என நினைத்தேன் ஆனால் நின்று அசத்தி விட்டார். ஜனனி ஐயர் தமிழ் பேசும் நாயகி வேண்டுமென தான் அவரை நடிக்க வைத்தேன். ஒரு நாளில் நான்கைந்து காட்சியெல்லாம் நடித்தார். அட்டகாசமாக நடித்தார். நரேன் சார் எனக்காக நடியுங்கள் என்றேன், உனக்காக நடிக்கிறேன் என நடித்து தந்தார். உமா தேவி மேடம் அட்டகாசமாக பாடல்  எழுதி தந்துள்ளார்.  அவருக்கு நன்றி. பிரிட்டோ அருமையாக இசையை தந்துள்ளார். ஒரு நல்ல படம் ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ பேசுகையில், “தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி. பாடல் இசை பற்றி இயக்குநரிடம் கேட்டால் அவர் என்ன நினைக்கிறார் என்பதே தெரியாது,  அவர் உதவியாளர்களிடம் கேட்டால் தான் தெரியும், நான் கொடுத்த முதல் சில டியூன்களே அவர்களுக்கு பிடித்திருந்தது அது எனக்கு சந்தோஷமாக இருந்தது. இரண்டு பாடல்களுமே உமாதேவி மேடம் கரக்சனே சொல்ல முடியாமல் எழுதி தந்துவிட்டார். இன்னொரு பாடலை பிஜுவே எழுதி விட்டார். இந்தப்படத்தில் பாடலை கேட்டு, அவரது கருத்துக்கள் கூறி, எனக்கு வழிகாட்டிய சந்தோஷ் நாராயணன் சாருக்கு நன்றி. பாடல் பிடித்திருந்தால், ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

நடிகை ஜனனி ஐயர் பேசுகையில், “பிரையன் B. ஜார்ஜை  தெகிடி படத்திலிருந்தே தெரியும், அவரிடம் நீங்கள் படம் எடுக்கும்போது வேறு யாரையாவது நாயகியாக போட்டால் சண்டை போடுவேன் என்றேன் ஆனால் உண்மையிலேயே என்னை நடிக்க வைத்துவிட்டார். இந்தக்கதையே வித்தியாசமாக இருந்தது என்று சொன்னால் அது வழக்கமாக இருக்கும், ஆனால் இன்று இங்கு நடந்த நிகழ்வை பார்த்திருந்தால் உங்களுக்கே தெரியும். நீங்கள் இங்கு பார்த்த அதே அளவு ஆச்சர்யம் படத்திலும் இருக்கும். படத்தில் ஒரு மேஜிக் நடந்தது ஒரு நாள் 5 காட்சி எடுக்க வேண்டும் ஆனால் அன்று நல்ல மழை, அதனால் மழையில் காட்சியை மாற்றி எடுத்தோம் அப்ப்டியும் மழை மாலை வரை நிற்காமல் பெய்ய வேண்டுமே என தவித்தோம், ஆனால் மேஜிக்காக கடவுள் ஆசிர்வாதத்தில் மழை நிற்காமல் பெய்தது. அந்த ஆசிர்வாதம் படத்திற்கும் கிடைக்க வேண்டும். படம் பாருங்கள் பிடிக்கும்.” என்றார்.

 

Koorman

 

முன்னதாக இப்படத்தின் மூலம் பி.ஆர்.ஓ-வாக அறிமுகமாகும் பரணிக்கு பி.ஆர்.ஓ சங்க தலைவர் டைமண்ட் பாபு வாழ்த்து தெரிவித்தார். அதை தொடர்ந்து சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.கார்த்தி, துணைத்தலைவர் மனவை பொன்.மாணிக்கம், இணை செயலாளர் ஜெ.சுகுமார் ஆகியோர் பி.ஆர்.ஓ பரணி மற்றும் திரு ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

Related News

8027

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery