தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமாவின் கவனம் ஈர்த்த இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித், தனது நீலம் புரொடக்ஷன் மூலம் பல தரமான திரைப்படங்களை தயாரித்து வருகிறார். ‘பரியேறும் பெருமாள்’, ‘மூன்றாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘ரைட்டர்’ என தொடர்ந்து அதிர்வலையை ஏற்படுத்தும் திரைப்படங்களை தயாரித்து வரும் பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘குதிரைவால்’.
யாழி நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் இயக்கியுள்ளனர். கலையரசன், அஞ்சலி பாட்டில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வென்றுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களை கவர்ந்ததோடு, பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், படம் வரும் மார்ச் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...