‘டான்’ மற்றும் ‘அயலன்’ படங்களில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் 20 வது திரைப்படமான இப்படத்தை ‘ஜதி ரத்னதாலு’ என்ற மிகப்பெரிய வெற்றி பெற்ற தெலுங்குப் படத்தின் இயக்குநர் அனுதீப் கே.வி இயக்குகிறார்.
சுரேஷ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் பாபு, நாராயந்தாஸ் நரங் மற்றும் புச்கூர் ராம் மோகன் ராவ் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பிலும், சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஷ்வா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார்.
தற்காலிகமாக ‘எஸ்.கே20’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று காரைக்குடியில் தொடங்கியது. இதில் சத்யராஜ், சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.
படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் உள்ளிட்ட விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...