தரமான திரைப்படங்கள் மற்றும் சுவாரஸ்யமான வெப் தொடர்களை வழங்கி வரும் ஜீ5 ஒடிடி தளம், தனது 4 வது ஆண்டை நிறைவு செய்கிறது. இதனை கொண்டாடும் விதமாக ரசிகர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, ’ZEE5 INDIANVIN BINGE-A-THON’ என்ற ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை, 3 நாட்களுக்கு அனைத்து மொழிகள் மற்றும் அனைத்து வகை ஜானர்களிலும் சிறந்த கதைகள், அனைத்தையும் வாய்ப்பினை வழங்குகிறது.
இது ZEE5 தளத்தின் சிறந்த பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை விளம்பரபடுத்துவதை இலக்காகக் கொண்டு, வாடிக்கையாளர்கள் 3 நாட்களுக்கு சிறந்த பிரீமியம் வெப் தொடர்கள் மற்றும் அனைத்து மொழிகளில் உள்ள முழுவதுமான திரைப்படங்களை இலவசமாக பார்க்கலாம். தமிழில் கா பே ரணசிங்கம், ஹிந்தியில் உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் அபய், மராத்தியில் முல்ஷி பேட்டர்ன், பங்களாதேஷ் மொழியில் லால்பஜார், தெலுங்கில் கீதா கோவிந்தம், மலையாளத்தில் மதுர ராஜா மற்றும் கன்னடத்தில் காளிதாசா மற்றும் மேஷ்த்ரு போன்ற எண்ணற்ற திரைப்படங்கள் இந்த கொண்டாட்ட சலுகையின் ஒரு பகுதியாக இலவசமாகக் கிடைக்கும்.
வரவிருக்கும் 4வது ஆண்டு விழாவில் ZEE5 இன் மற்றொரு பிராண்டான ZEE5 SPARK மூலம் மேலும் பல வெப் தொடர்கள் குறும்படங்கள் என எண்ணற்ற கதைகளை வழங்கவுள்ளது. இதில் ஹாலிடே, ரெடி 2 மிங்கிள், ட்யூட், தி கிரேட் இந்தியன் வெட்டிங், ஹேப்பிலி எவர் ஆஃப்டர் போன்ற ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் வெப் தொடர்களை பரிசாக வழங்கவுள்ளது இதில் முன்னணி பிரபலங்களான அஹானா கும்ரா, அமோல் பராஷர், அதா ஷர்மா, பிரியங்க் ஷர்மா, நவீன் கஸ்தூரியா மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் பாரிஷ் அவுர் சௌமைன், ஹாஃப் ஃபுல், குஜ்லி, கீர் மற்றும் பல பிரபல நடிகர்களான டாப்ஸி பன்னு, நசீருதீன் ஷா, அனுபம் கெர், நீனா குப்தா மற்றும் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்த குறும்படங்களின் ஒரு பெரிய நூலககமும் இலவசமாக பயனர்களுக்கு கிடைக்கும். ரசிகர்களுக்கு பெருங்க்கொண்ட்டாட்டம் காத்திருக்கிறது.
ZEE5 SPARK எனும் புதிய தளம் புதிய பார்வையாளர்களை, குறிப்பாக இளைஞர்களை, ஈர்க்கும் வகையில் குறும்படங்கள் மற்றும் இலவச ஸ்ட்ரீம் செய்யக்கூடிய வலைத் தொடர்களுடன் நீண்ட காலம் அவர்களை ஈர்த்து வைக்கும் நோக்கில் தொடங்கப்பட்டது. சமீபத்திய தொழில்துறை அறிக்கைகளின்படி தற்போது இந்தியாவில் மிக அதிகமாக வளர்ந்து வரும் ஓடிடி தளம் ZEE5 ஆகும். இத்தளம் 100 க்குமேற்பட்ட வகைகளில் பன்முகப்படுத்தப்பட்ட உள்ளடக்கத்திற்காகவும், உண்மையான, பொருத்தமான மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் கதைசொல்லலில் கவனம் செலுத்துவதாகவும் பாராட்டு பெற்றுள்ளது.
இது குறித்து ஜீ5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மனீஷ் கல்ரா கூறுகையில், “கடந்த ஒரு வருடத்தில் பல வெற்றிகளை பெற்று மிக உயர்வான நிலையை நோக்கி பயணித்து, மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். நாங்கள் புதிய சந்தைகளுக்குள் நுழைந்து, தொழில்துறையின் பல முக்கியஸ்தர்களுடன் கூட்டு சேர்ந்து, பல புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தி, சிறப்பான பிராந்தியமயமாக்கல் மற்றும் சிறப்பான பொழுதுபோக்கு உள்ளடக்கம் என்ற எங்களின் இலக்கை நோக்கி நெருக்கமாகச் சென்றதில், கடந்த நான்கு ஆண்டுகால எங்களின் செயல்பாடுகள் அபரிமிதமானது. இந்த பிரீமியம் சலுகைகள் மூலம் எங்கள் உள்ளடக்க நூலகத்தை மேலும் விரிவுபடுத்துதல், எங்கள் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துதல், பங்க்குதாரர்களை ஊக்குவித்தல் மற்றும் புதிய தொழில் தரநிலைகளை அமைப்பதன் மூலம் இந்த ஆண்டு இன்னும் பெரியதாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று நம்புகிறோம். இந்தியாவின் சிறந்த பன்மொழி கதைசொல்லி என்ற வகையில், எங்களின் பலதரப்பட்ட பார்வையாளர்களை மனதில் வைத்து, அவர்களுக்கு நெருக்கமான மற்றும் சிறந்த பொழுதுபோக்கு கதைகளை உருவாக்குவதன் மூலம் பொழுதுபோக்கு உள்ளடக்கத்தில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம், மேலும் ZEE5 தளத்தை ஜனநாயக வழியில், அனைவரும் விரும்பும் தளமாக மாற்றுவதில் தொடர்ந்து உழைப்போம். இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளவில் இதனை சாத்தியப்படுத்த முயல்வோம்.” என்றார்.
தலைமை உள்ளடக்க அதிகாரி நிமிஷா பாண்டே கூறுகையில், “அபாரமாக வளர்ந்து வரும் ZEE5 ஓடிடி தளம் பல வகையான கதைகளை நுகர்ந்து வருவதில், உள்ளடக்கங்கள் ஜனநாயக மயமாக்கப்பட்டுள்ளது, புதிய கருத்துக்கள் மற்றும் புதிய வகைகளுடன் கதையை ஆராய்ந்து விரிவுபடுத்த படைப்பாளிகளுக்கு வழி வகுத்தது. உண்மையான கதைகளுக்கான தேவையில் உள்ள மாற்றம், பெண்களை மையமாகக் கொண்ட கதைகளின் வெற்றி, குடும்ப பொழுதுபோக்கின் வளர்ச்சி, புதிய வகை நிகழ்ச்சிகள் மற்றும் பல அடுக்குகள் மற்றும் அழுத்தமிகு கதாபாத்திரங்களை ஏற்றுக்கொள்வது போன்ற காரணிகள் பல புதுமையான கதைகளை உருவாக்குவதில் பல துறைகளில் முதன்மையாக நிகழ்ந்துள்ளது. ZEE5 இல், பார்வையாளர் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் புதிய குரல்கள், கலாச்சாரங்கள் மற்றும் கண்ணோட்டங்களுக்கேற்ற கதைகள் வெளிவர வேண்டும் என்று நாங்கள் நம்புவதால், நேர்மையான மற்றும் உண்மையான கதைசொல்லல் மூலம் பார்வையாளர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டுமென்பதை எப்போதும் இலக்காகக் கொண்டுள்ளோம். இந்த நோக்கத்தில், நாட்டின் முன்னணி படைப்பாளிகள் சிலருடன் நாங்கள் வெற்றிகரமான கூட்டணிகளை பெற்றுள்ளோம் மற்றும் பார்வையாளர்களிடையே குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாகச் செயல்பட்ட நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளோம்- அபய், சூரியகாந்தி, காகாஸ், ரங்பாஸ், பிரேக் பாயிண்ட், ஸ்டேட் ஆஃப் சீஜ் மற்றும் ஃபிரண்ட்ஸ் ரீயூனியன் போன்ற எண்ணற்ற தொடர்களை வழங்க்கியுள்ளோம். எங்கள் பார்வையாளர்களின் அபரிமிதமான அன்புடனும், சிறப்பான வரவேற்புடனும் ஆதரவுடனும், தமிழ், தெலுங்கு, பஞ்சாபி மற்றும் பெங்காலி எனப் பல மொழிகளில் நாங்கள் ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் பெருமை கொள்கிறோம், மேலும் கிராமப்புறங்களிலிருந்து பெருநகரங்கள் வரை அழுத்தமான மற்றும் பலதரப்பட்ட கதைகளுடன் எங்கள் தரத்தை மென்மேலும் மேம்படுத்த உள்ளோம். எங்கள் பார்வையாளர்களுக்கு தரமான பொழுதுபோக்கை வழங்கும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு பன்மொழி கதைசொல்லியாக ZEE5 இன் நிலை வலுப்படுகிறது.” என்றார்.
இன்று, ZEE5 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மணிநேரங்களுடன் தேவைக்கேற்ப உள்ளடக்கம் மற்றும் 100+ நேரலை டிவி சேனல்களை வழங்குகிறது. 140+ அசல் நிகழ்ச்சிகள் மற்றும் 85+ அசல் திரைப்படங்கள் நிறைந்த நூலகத்துடன், ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி என ZEE5 12 இந்திய மொழிகளில் சிறந்த கதைகளை வழங்குகிறது. 2022 ஆம் ஆண்டிற்கான ஒரு அற்புதமான வரிசையை இந்த தளம் கொண்டுள்ளது, இது அதன் விரிவான உள்ளடக்க நூலகத்தில் பொழுதுபோக்கு அம்சங்களை தேடுபவர்களுக்கு பரந்த அளவிலான பட்டியலை வழங்கும்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...