இயக்குநர் விஜயை திருமணம் செய்துக்கொண்ட நடிகை அமலா பால், ஒரு வருடத்திற்க்குள்ளாகவே அவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் நடிப்பதில் தீவிரம் காட்டி வர, அமலா பாலை தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் படு தீவிரம் காட்டி வருகிறார்கள்.
‘வட சென்னை’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘திருட்டுப்பயலே 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் அமலா பாலிடம், யார் கால்ஷீட் கேட்டாலும், தான் கேட்கும் சம்பளத்தை கொடுத்தால், கால்ஷீட் கொடுத்து விடுவதோடு, படக்குழுவினருக்கு ரொம்ப நல்லாவே ஒத்துழைப்பும் கொடுக்கிறாராம். இதற்காகவே அமலா பாலை தங்களது படங்களில் ஹீரோயினாக்க இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் பேரார்வம் காட்டி வருகிறார்களாம்.
இதற்கிடையே, நயந்தாரா, திரிஷா போன்றாவர்கள் நடிப்பது போல ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் உங்களை ஹீரோயினாக்குகிறோம், என்று சொல்லி பல இயக்குநர்கள் அமலா பாலிடம் கால்ஷீட் கேட்க, அதற்காகவும் மயங்கிவிடும் அமலா பால், உப்புமா இயக்குநர்களுக்கும் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.
இந்த காரணத்தால் தான் அமலா பாலுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைப்பதாக கோடம்பாக்க டீ கடைகளில் பேசப்பட்டு வருகிறது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...