திரைப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நிதியாளர் மற்றும் திரையரங்கு உரிமையாளர் என்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழும் கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியனின் இல்ல திருமண விழா பிப்ரவரி 21 ஆம் தேதி காலை சென்னை திருவான்மியூரில் உள்ள பிரமாண்டமான திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்ற திருமணத்தில் பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கலந்துக்கொன் டு மணமக்கள் சுஷ்மிதா MBA - ஆர்.சரண் MBA ஆகியோரை வாழ்த்தினார்கள்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, விக்ரம் பிரபு, விஜய் ஆண்டனி, நாசர், மனோபாலா, மயில்சாமி, வைபவ், சுப்பு பஞ்சு, இயக்குநர்கள் வெங்கட் பிரபு, லிங்குசாமி, சரண், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, போனி கபூர், எல்ரெட்குமார், சிவா, ரோகிணி தியேட்டர் பன்னிர் செல்வம் உள்ளிட்ட திரையுலத்தை சேர்ந்த பலர் நேரில் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
மேலும், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர் பாபு மற்றும் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், டிடிவி தினகரன், எஸ்.வி.சேகர், ராணிபெட் காந்தி, கு.பிச்சாண்டி, வி.வி.ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் நேரில் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...