Latest News :

’வலிமை’ படத்தில் எனது காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் - நடிகை ஹூமா குரேஷி
Wednesday February-23 2022

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘வலிமை’ வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை கொண்டாட அஜித் ரசிகர்கள் தயாராகி வரும் நிலையில், இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, படத்தில் நடித்த தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

 

படம் குறித்து அவர் கூறுகையில், “’வலிமை’ எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பானதொரு படம், எனது திறமையை பரிசோதித்து கொள்ள இதன் மூலம்  எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குநர் வினோத் சார் என்னுடைய கதாப்பாத்திரத்தை நேர்மையான போலீஸ் அதிகாரியாக, நிறைய ஆக்சன் காட்சிகளைக் கொண்ட பாத்திரமாக உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு முறையும், ஆக்சன் பிளாக்குகள் என்றாலே, நான் உற்சாகமாக இருப்பேன். பொதுவாக, ஒரு ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படத்தில் ஆண் கதாப்பாத்திரங்களுக்கு மட்டுமே நடிக்கும் வாய்ப்புகள் இருக்கும், ஆனால் வினோத் சார் பெண் கதாபாத்திரங்களை கணம் மிகுந்த  பாத்திரமாக உருவாக்கி திரைத்துறைக்கு  முன்னுதாரணமாக திகழ்கிறார். குறிப்பாக, எனது பாத்திரம் திரையில் நிறைய இடத்தைப் பெற்றிருப்பதைக் காண மிக மகிழ்ச்சியாக  உள்ளது. 

 

‘பில்லா 2’ படத்தில் அஜித்துடன் இணைந்து பணியாற்ற வேண்டியது, ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. வலிமை படத்திற்கான அழைப்பு வந்தபோது, நான் இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவருடன் திரையைப் பகிரப் போகிறேன் என்பது, மிகப்பெரும் உற்சாகத்தை தந்தது. வலிமை படத்தில் அஜித்குமாருடன் இணைந்து நான்  நிறைய காட்சிகளில் வருகிறேன், எங்கள் காட்சிகளை ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள்.” என்றார்.

 

Ajith and Huma Qureshi

 

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது பேவீயு புரொஜக்ட்ஸ் நிறுவனம் சார்பில் போனி கபூர் தயாரித்துள்ள ‘வலிமை’ தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

8055

அரசியல் ஆன்மீகம் சினிமா! - கவனம் ஈர்க்கும் நடிகர் மை. பா. நாராயணன்
Tuesday January-21 2025

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...

’நிறம் மாறும் உலகில்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
Tuesday January-21 2025

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...

’மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ இளைஞர்களுக்குப் பிடித்த ஜாலியான படமாக இருக்கும் - இயக்குநர் பி.வாசு உறுதி
Tuesday January-21 2025

யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...

Recent Gallery