தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத திரைப்படங்களில் ஒன்று ‘பருத்திவீரன்’. தமிழ் சினிமாவில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, பல இயக்குநர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த படமாகவும் திகழும் அத்திரைப்படம் வெளியாகி செய்த வசூலும், விமர்சன ரீதியான பாராட்டுக்களாலும், அப்படத்தின் சாயல் கொண்ட படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவில் இன்னமும் தவிர்க்க முடியாத பாணியாகவே இருந்து வருகிறது.
இப்படி மாற்றத்தையும், புதிய வழியையும் போட்ட ‘பருத்திவீரன்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகின்றது. இயக்குநர் அமீர் இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் தயாரிப்பில், நடிகர் கார்த்தியின் அறிமுக திரைப்படமான ‘பருத்திவீரன்’ கடந்த 2007 ஆம் ஆண்டு, பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியானது.
ஒரு அறிமுக நடிகரின் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, படத்திற்கு கிடைத்த ஓபனிங்காலும் தமிழ்த் திரையுலகமே பெரும் வியப்படைந்தது. தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிய அப்படத்தை தொடர்ந்து கார்த்தி தேர்ந்தெடுத்த பல கதைகள் அவருக்கு வெற்றி படமாக அமைந்ததோடு, அவரை தமிழ் சினிமாவின் முன்னணி நாயர்களின் பட்டியலிலும் இடம் பிடிக்க செய்தது.
இன்று தனது சினிமா பயணித்தின் 15 வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் கார்த்தி இதுவரை 20 படங்கள் நடித்திருந்தாலும், அவர் நடித்த பல படங்கள் வியாபார ரீதியான வெற்றி பெறுவதோடு, விமர்சன ரீதியாக பாராட்டுகளையும், பல விருதுகளையும் வென்று படங்களாகும்.
‘பையா’, ‘நான் மகான் அல்ல’,‘சிறுத்தை’, ‘மெட்ராஸ்’, ‘கொம்பன்’, ‘தீரன்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘கைதி’ உள்ளிட்ட பல படங்கள் மூலம் வித்தியாசமான அதே சமயம் தரமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் கார்த்தி மற்றும் ‘பருத்திவீரன்’ படக்குழுவினருக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
தனது திரை பயணத்தின் 15 வது வருடம் மற்றும் ‘பருத்திவீரன்’ கொடுத்த மாபெரும் அங்கீகாரம் மூலம் பெரும் மகிழ்ச்சியடைந்திருக்கும் கார்த்தி, “’பருத்தி வீரன்’ திரைப்படத்தில் என்னுடைய திரை வாழ்க்கை தொடங்கியது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதமாகவே நான் உணர்கிறேன். பருத்திவீரன் படத்தில் என்னுடைய ஒவ்வொரு அசைவும் அமீர் சாரால் வடிவமைக்கப்பட்டுப் பயிற்றுவிக்கப்பட்டது. எனக்குக் கிடைத்த அத்தனை புகழும் அமீர் சாரையே சேரும். செய்யும் வேலையில் என்னை முழுமையாக ஆழ்த்திக் கொண்டு அதை ரசித்தும் செய்ய வேண்டும் என்று அவர் எனக்குச் சொன்ன அறிவுரையே நான் கற்ற பல பாடங்களில் பொக்கிஷமாக நினைக்கும் ஒரு பாடம். இந்த அழகான பாதையை வகுத்துக் கொடுத்த அமீர் சார், ஞானவேல், அண்ணா, என் அன்பார்ந்த ரசிகர்கள் மற்றும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் என அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன்.” என்று கூறியிருக்கிறார்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...