தனி இசைபாடல்களுக்கு மக்களிடம் கிடைத்து வரும் வரவேற்பை தொடர்ந்து பல முன்னணி இசையமைப்பாளர்கள் தனி இசைப்பாடல்கள் உருவாக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அதிலும், அதுபோன்ற பாடல்களின் வீடியோக்களில் பங்குபெறும் நட்சத்திரங்கள் ரசிகர்களின் பேவரைட் கலைஞர்களாக உருவெடுப்பதால் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் அதில் நடிக்கவும், நடனம் ஆடவும் ஆசைப்படுகிறார்கள்.
அந்த வகையில், ரசிகர்களின் நாடித்துடைப்பை அறிந்து அதற்கேற்ப படைப்புகளை வழங்கி வரும் சரிகமா ஒரிஜினல்ஸின் அடுத்த வெளியீடாக பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ள ‘மயக்கிறியே’ அமைந்துள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இப்பாடலின் முன்னோட்டம் சென்னை போரூரில் உள்ள ஜிகே திரையரங்கில் சமீபத்தில் திரையிடப்பட்டது. ‘ஃபிளாஷ் மாப்’ என்று அழைக்கப்படும் நடன நிகழ்ச்சியின் போது, இப்பாடலின் முதன்மை வேடத்தை ஏற்றுள்ள ‘பிக் பாஸ்’ பிரபலமான நடிகர் முகென் ராவ் ரசிகர்களிடையே திடீரெனத் தோன்றி அவர்களை ஆச்சரியப்படுத்தினார்.
ரசிகர்களின் உற்சாக ஆராவாரத்திற்கிடையே முகென் ராய் நடனமாடி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அவருடன் இணைந்து பார்வையாளர்களும் ஆட, ஒட்டுமொத்த திரையரங்கிலும் திருவிழாச் சூழல் நிலவியது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஏ என் எஸ் என்டெர்டயின்மென்ட் வழங்கும் *மயக்கிறியே’-வை ஆனந்த் ஆர், ஆர் எம் நாகப்பன் மற்றும் நிக் ஸ்டெல்சன் ஜோ ஆகியோர் தயாரித்துள்ளனர். முகென் ராவுடன் நடிகை ஆத்மிகா இப்பாடலின் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.
முன்னணி மால் ஒன்றில் தனது மனதுக்கு பிடித்தப் பெண்ணை சந்திக்கும் இளைஞர் ஒருவருக்குள் உருவாகும் உணர்வுகளின் கலவை தான் ‘மயக்கிறியே’. அனிவீ இசையமைத்துள்ள இப்பாடலை அனிருத் உணர்சி ததும்ப பாடியுள்ளார். ஜிம்மி ரூத் இந்த இசைக் காணொலியை இயக்கியுள்ளார்.
மணிகண்டன் ஒளிப்பதிவை கையாள, அப்சர் நடனம் அமைத்துள்ளார். படத்தொகுப்புக்கு கமலும், கலைத் துறைக்கு சூர்யா ராஜீவனும் பொறுப்பேற்றுள்ளனர். ஷியாம் நெமிரோவின் நிர்வாகத் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மயக்கிறியே’-வின் கிரியேட்டிவ் புரொட்யூசர் டோங்க்லி ஜம்போ ஆவார்.
அனிவி இசையில் அனிருத் ரவிச்சந்தர் பாட ஜிம்மி ரூத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மயக்கிறியே-வை காதலர் தின சிறப்பு பாடலாக ஏ என் எஸ் என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில் சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியிட்டுள்ளது. இப்பாடலுக்கு யூடியூபில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...