தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில், தற்போதுள்ள ஆர்.கே.செல்வமணி தலைமையிலான நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ‘புது வசந்தம்’ என்ற பெயரில் ஒரு அணி போட்டியிட்டது. அந்த அணியை எதிர்த்து கே.பாக்யராஜ் தலைமயில் ‘இமயம்’ என்ற பெயரில் ஒரு அணி போட்டியிட்டது.
நேற்று வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிந்த அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆ.கே.செல்வமணி 955 வாக்குகள் பெற்று மீண்டும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட கே.பாக்யராஜ் 566 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய், விரைவில் அரசியல் பணிகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு தனது படத்தின் பணிகளில் தீவிரம் காட்ட உள்ளார்...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...
‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘முரா’...