காமெடி நடிகரான சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடுதலை’ படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், சூரி நாயகனாக நடிக்க தொடங்கியிருப்பதால் அவரை பல இயக்குநர்கள் நாயகனாக நடிக்க அனுகியிருக்கிறார்கள். ஆனால், அனைவருக்கும் நன்றி வணக்கும் கூறி திருப்பி அனுப்பிய சூரி, யாரிடமும் கதை கேட்கவில்லையாம்.
மேலும், வரும் கதைகளை எல்லாம் கேட்டு, அதில் எந்த கதையை தேர்வு செய்வது என்று குழம்பி, பிறகு மொக்கை படங்களில் ஹீரோவாக நடித்து விட கூடாது, என்பதில் கவனமாக இருக்கும் சூரி, அப்படியே திடீர் முடிவு ஒன்றையும் எடுத்துள்ளாராம். அவரது இந்த திடீர் முடிவால் பல அறிமுக இயக்குநர்க அப்செட்டாகியிருக்கிறார்களாம்.
அதாவது, ஹீரோவாக நடிக்க தொடங்கியிருக்கும் சூரி, முன்னணி இயக்குநர்கள் படங்களில் மட்டுமே ஹீரோவாக நடிக்க வேண்டும், என்று முடிவு செய்திருக்கிறாராம். வெற்றிமாறன் படம் முடிந்த உடன், அவரைப் போன்று மக்களிடம் பிரபலமாக இருக்கும் மற்றும் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் படத்தில் தான் அடுத்து ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று சூரி முடிவு செய்துவிட்டாராம்.
அவரது எண்ணம் போல தற்போது முன்னணி இயக்குநரின் இயக்கத்தில் இரண்டாவதாக ஹீரோவாக நடிக்கப் போகிறாராம். ஆம், இயக்குநர் அமீர் இயக்கும் படத்தில் சூரி நாயகனாக நடிக்க இருக்கிறாராம்.
வெற்றிமாறன் மற்றும் தங்கம் எழுதிய கதை இயக்கும் அமீர், அப்படத்திற்கு ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்று தலைப்பு வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த படம் முடிந்த பிறகு மற்றொரு படத்தை இயக்க இருக்கிறாராம். இதில் தான் சூரி நாயகனாக நடிக்கிறாராம்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...