மலேசியா தலை நகர் கோலம்பூரில், மலேசிய தமிழ் பத்திரிக்கையான 'தேசம்' நடத்தும் 'தேசம் சாதனையாளர் விருது' வழங்கும் விழாவில் 'பிளஸ் ஆர் மைனஸ்' படத்தின் இசை மற்றும் டீஸர் மிக பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. விழாவில் படத்தின் இயக்குனர் ஜெய் மற்றும் நாயகன் அபி சரவணன் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு தேசம் பத்திரிக்கையின் நிறுவனர் குணாளன் மணியன் தலைமை தாங்கினார்.
மலேசிய சுகாதரதுறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுப்ரமணியம் மற்றும் மலேசிய விளையாட்டுதுறை துணை அமைச்சர் டத்தோ M. சரவணன் ஆகியோர் 'பிளஸ் ஆர் மைனஸ்' படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியிட, மதுரை தொழிலதிபர் சத்யம் குரூப் செந்தில் மற்றும் மக்கள் ஆட்டோ மன்சூரலிகான் & தயாரிப்பாளர் அரவிந்த் ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.
மனித செம்மல் அம்மா ரத்னவள்ளி, டத்தோ பரமசிவன் DCP POLICE OF MALAYSIA, டத்தோ குமரன் HEAD OF POLICE FORCE, டத்தோ முனியாண்டி HEAD OF MAKKAL SEVAI FOR MALAYSIA, டத்தோ ஸ்ரீ சையத் இப்ராஹிம் PRESIDENT KIMMA ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...