பிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் சிவசலபதி, சாய் சரவணன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ’குருமூர்த்தி’. பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.பி.தனசேகர் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
’ஜெய்பீம்’ படத்தின் மூலம் சர்ச்சைக்கு உள்ளான ’குருமூர்த்தி’ என்ற பெயர் இந்தப் படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. கடமைத் தவறாத போலீஸ் அதிகாரியாக பணியாற்றும் ஒருவரின் வாழ்க்கையில் திடீரென்று ஒரு பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது, அதனால் கடமைத்தவறாமல் பணியாற்றும் அவரது பணிக்கு சோதனை ஏற்படுகிறது. குடும்பத்திலும் பிரச்சனை வருகிறது. இதைஎப்படி அந்தப் போலீஸ் அதிகாரி சமாளித்தார், என்பதை விளக்கும் விதமாக-இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்தப்படம் காமெடி , சென்டிமென்ட் , ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சஸ்பென்ஸ் படமாக தயாரித்திருக்கிறார்கள். இந்தப்படத்திற்கான அனைத்துக் கட்ட படபிடிப்புகளும். நீலகிரிமாவட்டம் பாண்டிச்சேரி, கேரளாவை சேர்ந்த புத்தேரி போன்ற பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் எல்லை பகுதிகளிலும் நடந்து முடிவடைந்திருக்கிறது. ஜனவரியில் துவங்கிய இந்தப் படத்தின் பட பிடிப்பு ஒரேஷெட் யூலில் அனைத்துக் கலைஞர்களின் ஒத்துழைப்போடு முடிவடைந்திருக்கிறது. வரும் ஏப்ரல் மாதம் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாட்டோடு இந்தப்படத்திறகான இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடந்துவருகிறது.
நடராஜ்(எ) நட்டி, பூனம் பஜ்வா, ராம்கி, மனோபாலா, ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன் .அஸ்மிதா. சஞ்சனா சிங், ரிஷா ஜேகப்,ரேகா சுரேஷ், சம்யுக்தா, மோகன் வைத்யா, யோகிராம், பாய்ஸ்ராஜன், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
தேவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சத்ய தேவ் உதயசங்கர் இசையமைத்திருக்கிறார். மகுவி, வெள்ளத்துரை, கீர்த்தி வாசன் ஆகியோர் பாடல்கள் எழுத, எஸ்.என்.பாசி படத்தொகுப்பு செய்கிறார். கீர்த்தி வாசன் வசனம் எழுதுகிறார். தாகூர் கலையை நிர்மாணிக்க, ராதிகா நடனம் அமைத்துள்ளார். பயர் கார்த்திக் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, மக்கள் தொடர்பு பணியை பெருதுளசி பழனிவேல் கவனிக்கிறார்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...