இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படங்களில் ஒன்றான இப்படத்தில் கலையரசன் நாயகனாக்வும், அஞ்சலி பாட்டில் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.
மனிதனின் நிகழ்கால உணர்வுகளும் கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் குறித்த கற்பனைகளும், கனவுகளும் அதன் தாக்கமும் மூலக்கூறுகளாக்கப்பட்ட திரைக்கதையால் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் முற்றிலும் புதிய முயற்சி சினிமாவகவும், ரசிகர்களுக்கு புதுவகையான அனுபவத்தை கொடுக்கும் திரைப்படமாகவும் இருக்கும், என்று படம் பார்த்த பிரபலங்கள் பாராட்டி வருகிறார்கள்.
மனோஜ் மற்றும் ஷியாம் இயக்கியிருக்கும் இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துக்கொண்டு பல விருதுகளை பெற்றிருக்கும் நிலையில், வரும் மார்ச் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதுவரை சமூக கருத்துக்கள் கொண்ட படங்களை தயாரித்து வந்த நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம், யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் ‘குதிரைவால்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் புதிய முயற்சி மற்றும் ரசிகர்களுக்கு மாறுபட்ட சினிமா அனுபவத்தை கொடுக்கும் படமாக மட்டும் இன்றி ஆராய்ச்சி ரீதியிலான ஒரு திரைப்படமாகவும் உருவாகியுள்ளது.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...