அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வலிமை’ ரூ.100 கோடி வசூல் செய்ததாக ஒரு தகவலும், படம் எதிர்ப்பார்த்த அளவு வசூலிக்கவில்லை என்ற மற்றொரு தகவலும் பரவி வருகிறது. ஆனால், இந்த இரண்டு தகவல்களையும் காணாமல் போகும் அளவுக்கு அஜித்தின் அடுத்தப் படம் பற்றிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத் தான் இயக்குகிறார். போனி கபூர் தான் தயாரிக்கிறார். அஜித்தின் 61 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ‘ஏ.கே 61’ என்று அழைக்கிறார்கள். தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதோடு, படத்தின் கதை பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது.
அதாவது, எச்.வினோத் அஜித்துக்கு பல கதைகள் சொன்னாராம். ஆனால், அந்த கதைகள் எதுவும் அஜித்துக்கு பிடிக்கவில்லையாம். பிறகு அஜித்தே, வெற்றி படம் எதையாவது ரீமேக் பண்ணலாம் என்ற யோசனையை சொன்னாராம். அதுமட்டும் இன்றி, இந்திய மொழித் திரைப்படங்களை ரீமேக் செய்யாமல் ஹாலிவுட் படம் எதையாவது ரீமேக் செய்யலாம், என்று கூறிய அஜித், எந்த படத்தை ரீமேக் பண்ணலாம் என்றும் கூறிவிட்டாராம்.
ஆம், அஜித்துக்கு மிகவும் பிடித்த ஹாலிவுட் நடிகர் அல்பசீனோ நடிப்பில் 1975 ஆம் ஆண்டு வெளியான ‘டாக் டே அஃப்ட்டர்நூன்’ (Dog Day Afternoon) என்ற படத்தை தான் அஜித் தேர்வு செய்திருக்கிறாராம். வங்கி கொள்ளையை மையப்படுத்திய இப்படம் தான் அஜித்தின் 61 வது படமாக உருவாக இருப்பதாக கோலிவுட்டில் பேச்சு அடுபடுகிறது.
இதற்காக அந்த ஹாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை முறைப்படி பெற்று போனி கபூர் தயாரிக்க இருக்கிறாராம்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...