விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். சரத்குமார் முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்கும் இப்படத்தில் நடிகர் விஜயகாந்த் சிறப்பு வேடம் ஒன்றில் நடிக்கிறார். கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான தனஞ்செயா மற்றும் பிருத்வி அம்பர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாக்கூர், ப்ரணிதி, இயக்குனர் ரமணா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப்.பி, பங்கஜ் போரா மற்றும் இன்பினிட்டி பிலிம் வெஞ்சர் சார்பில் எஸ்.விக்ரம் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. மற்ற பின்னணி வேலைகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தின் தலைப்பு குறித்து இயக்குநர் விஜய் மில்டன் கூறுகையில்,, “பல்வேறு தொழில்களின் அடிப்படையில் மக்கள் மழையை ஒரு வரம் அல்லது சாபமாக உணர்கிறார்கள் ஆனால், இங்கே கதாநாயகன் ஒரு விதிவிலக்கானவன், மழையை விரும்பாததற்கு அவனுக்கு தகுந்த காரணமும் உள்ளது. ஆனால் அதற்கு பின்னணி கதை எதுவும் இல்லை, மழையுடன் தொடர்புடைய நினைவுகள் சில அவனில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, ஆனால் இறுதியில் இவை அனைத்திலும் ஒரு மாற்றம் ஏற்படுகிறது.” என்றார்.
வித்தியாசமான கதைக்களத்தோடு உருவாகியிருக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தியூ - தாமன் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமும் இப்படம் தான். படம் கோடையில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...