கடந்த மூன்று மாதங்களாக தமிழக மக்கள் அனைவரது இல்ல தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பான நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியாகத்தான் இருக்கும். டிவி பார்க்காதவர்கள் கூட இந்த நிகழ்ச்சி மீது வெற்றிக்கொண்டு இருந்தார்கள். அதற்கு காரணம், அடுத்தவர்களின் அந்தரங்கம் தான். மேலும், போட்டியில் பங்கேற்றவர்கள் காதல், கசமுசா, கவர்ச்சியான உடை என்று நாளுக்கு நாள் நிகழ்ச்சியை பரபரப்பாக்க, அது போதது என்று நடிகை ஓவியாவின் காதல் காவியம் நிகழ்ச்சியை ஜெட் வேகத்திற்கு நகர்த்துச் சென்றது.
ஆரவ் என்பவரை காதலித்து வந்த ஓவியா ஒரு கட்டத்தில் பைத்தியம் பிடித்தவரைப் போல நடந்துக்கொண்டதோடு, தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். பிறகு அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மீண்டும் அவரை பிக் பாஸ் வீட்டுக்குள் அழைத்து வர விஜய் டிவி பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், எதற்கும் செவி சாய்க்காமல் தலைமறைவானார் ஓவியா.
இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100 வது நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. வெற்றியாளர் யார்? என்று அறிவிக்கும் நிகழ்ச்சி என்பதால், அனைத்து மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. மேலும், போட்டியில் பங்கேற்று தோல்வியுற்ற ஓவியா உள்ளிட்ட அனைத்து போட்டியாளர்களும் நேற்றைய நிகழ்வில் பங்கேற்றார்கள்.
இதில், ஓவியா விரட்டி விரட்டி காதலித்த ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஓவியாவின் ஆதரவாளர்கள் ஆரவுக்கு வாக்களித்ததால் தான் அவர் வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. ஏன், ஓவியா கூட ஆரவுக்கு தான் ஓட்டு போட்டாராம்.
இந்த நிலையில், போட்டியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் ஆனால், அது கணேஷ் வெங்கட்ராம் தான். ஆனால், ஆரவ் வெற்றி பெற்றதற்கு பின்னணியில் விஜய் டிவியில் சதி இருக்கிறது, என்று சிலர் கூறி வருகிறார்கள். அப்படி என்ன சதி, என்று விசாரிக்கையில், எஞ்சியிருந்த நான்கு போட்டியாளர்களில் கணேஷ் வெங்கட்ராம் மற்றும் சினேகன் இருவரில் ஒருவர் தான் வெற்றி பெறுவார்கள், என்று தமிழகமே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்க, மக்கள் எதிர்ப்பார்ப்பது நடக்க கூடாது என்ற முடிவுக்கு வந்த விஜய் டிவி ஆரவை வெற்றியாளராக தேர்வு செய்ததாகவும், முதலில் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என்ற முடிவு இருந்த ஓவியாவை, ஆரவ் மற்றும் அவரது குடும்பத்தாரை சந்திக்க ஏற்பாடு செய்து தருகிறோம், என்பதை கூறியே விஜய் டிவி நிகழ்ச்சிக்கு அழைத்து வந்ததாம்.
ஓவியாவின் ஆதரவும் ஆரவுக்கே இருப்பதால், ஆரவை வெற்றி பெற்றவராக அறிவித்துவிடலாம் என்று முடிவு செய்த விஜய் டிவி, மக்கள் மீது சிலருக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி, பிறகு சற்றும் யாரும் எதிர்ப்பாரத விதத்தில் மற்றவருக்கு பிக் பாஸ் பட்டம் கொடுக்க வேண்டும் என்ற முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், விஜய் டிவி-யின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நடக்கும் சதி, பிக் பாஸிலும் நடந்தது ஒன்னும் ஆச்சரியமில்லை, என்று இந்த நிகழ்ச்சியை ரெகுலராக பார்த்து வந்தவர்கள் பலர் புலம்புகிறார்கள்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...