தயாரிப்பாளர் போனி கபூர் அஜித்தின் 61 வது படத்தின் அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் இருக்க, அவரோ திடீரென்று ஆர்.ஜே.பாலாஜியை ஹீரோவாக வைத்து தயாரிக்கும் படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக் ஆக உருவாகும் இப்படத்திற்கு ‘வீட்ல விசேஷம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிப்பதோடு, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கவும் செய்கிறார்.
இதில், ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா முரளி நடிக்க, இவர்களுடன் சத்யராஜ், ஊர்வசி முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மறைந்த நடிகை கே.பி.ஏ.சி லலிதா, சீமா, ரமா, பிரதீப் கோட்டயம், புகழ், ஷிவானி நாராயணன், யோகி பாபு, ரவிக்குமார் மேனன், ஷங்கர் சுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பா.விஜய் பாடல்கள் எழுத, செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்கிறார். சாந்தனு ஸ்ரீவஸ்தவ் மற்றும் அக்சத் கில்டியல் கதை எழுதியிருக்கிறார்.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேவியூ புராஜெக்ட்ஸ் நிறுவனங்கள் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் முழுக்க முழுக்க குடும்ப நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது.
தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் படக்குழு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜூன் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘வீட்ல விசேஷம்’ திரைப்படம் வெளியாக உள்ளது.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...