நடிகர் விக்ரமின் மகன் துருவ் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகாகிறார். கடந்த சில தினங்களாகவே, விக்ரம் மகன் துருவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், இன்று சற்று நேரத்திற்கு முன்பாக தனது மகன் ஹீரோவாக களம் இறங்கும் செய்தியை நடிகர் விக்ரம் அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தெலுங்கு படமான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் துருவ் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமைக்காக விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களும், பல தயாரிப்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டிருந்த நிலையில், இ4 எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற்றுள்ளது. மேலும், இப்படத்தில் ஹீரோவாக விக்ரம் மகன் துருவ் விக்ரமை நடிக்க வைக்க இவர்கள் முயற்சித்து வந்து, தற்போது அதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.
இப்படத்தை இயக்கப் போவது யார்? இசையமைப்பாளர், ஹீரோயின் உள்ளிட்ட படத்தின் பிற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...