சமீபத்தில் வெளியான ‘வலிமை’ படத்தை தொடர்ந்து அஜித்தின் 61 வது படத்தையும் எச்.வினோத் இயக்க இருப்பதாகவும், போனி கபூர் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், அந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக அஜித்தின் 62 வது படத்தின் அறிவிப்பு வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், அஜித்தின் 62 வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாகியுள்ளது. அஜித்தின் 62 வது படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இது குறித்து லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அஜீத்தின் 62 ஆவது படத்தை நாங்கள் தயாரிக்கிறோம் என்பதைப் பெருமையுடன் அறிவிக்கிறோம். அந்தப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனர் சுபாஸ்கரன் சார்பாக இப்படத்தின் தயாரிப்புப் பொறுப்பை ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் ஏற்றிருக்கிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு இறுதியில் தொடங்கும், அடுத்த ஆண்டு மத்தியில் படம் வெளியாகும். படத்தில் பங்குபெறும் மற்ற கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.
அஜீத்தோடு இணைந்து பணியாற்றுவதில் லைகா நிறுவனம் மகிழ்ச்சி கொள்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸுடன் அஜித் இணைந்திருப்பதை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...