Latest News :

நானி நடிக்கும் ‘தசரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
Monday March-21 2022

அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கத்தில், நானி நடித்திருக்கும் ஆக்‌ஷன் மற்றும் மாஸ் கமர்ஷியல் திரைப்படம் ‘தசரா’. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் சுதாகர் செருகுரி மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்ட படமாக தயாரிக்கிறார். 

 

இதில், நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்ட காட்சித்துணுக்கு சமீபத்தில் வெளியானது. போஸ்டரில் நடிகர் நானி லுங்கியுடன் கரடுமுரடான தோற்றத்தில் தோன்றியுள்ளார். அவரது இந்த தோற்றம் பெரும் ஆவலை தூண்டுவதாக அமைந்துள்ளது.

 

முன்னோட்ட காட்சி துணுக்கில், நடிகர் நானி தனது கூட்டத்துடன் சிங்கரேணி சுரங்க பகுதியில் நடந்து வருகிறார். அவரது வித்தியாசமான முரட்டு தோற்றம் நம்மை மிரட்டும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் சந்தோஷ் நாராயணனின் பின்ணனி இசை இக்காட்சிக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது.

 

Dasara

 

கோதாவரிகானியில் உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் உணர்ச்சிகரமான கதையில், நானி மாஸ் மற்றும் ஆக்சன் கலந்த அதிரடியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு அழுத்தமான டிராமா திரைப்படமாக உருவாகும்  ‘தசரா’ திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.

 

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார்.

Related News

8105

Watch Despicable Me 4 in theatres in English, Tamil, Hindi and Telugu on 5th July 2024!
Thursday July-04 2024

Ex-Supervillan, Gru is all set to create mayhem with Lucy, his adorable children, Margo, Edith and Agnes along with the newest addition, Gru Junior...

40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த ‘இந்தியன் 2’ விளம்பர பேனர்!
Thursday July-04 2024

கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் இணைந்து தயாரித்திருக்கும்  ‘இந்தியன் 2’ திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

டெட்பூல் & வால்வரின் புதிய அதிரடியான புரோமோ வெளியானது!
Thursday July-04 2024

டெட்பூல் மற்றும் வால்வரின் என்ற சூப்பர் ஹீரோக்களின் கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது...