’கபாலி’ படத்தில் கோழிக்கறி என்று ரஜினிகாந்தை கலாய்க்கும் காட்சி மூலம் பிரபலமானவர் லிங்கேஷ். அப்படத்தை தொடர்ந்து ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து வந்தவர் ‘காலேஜ் ரோடு’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக களம் இறங்குகிறார்.
மாணவர்களின் கல்விக்கடன் அதன் பின்னால் இருக்கும் அரசியல், சமூக பிரச்சனைகள் பற்றி த்ரில்லர், காமெடி கலந்த கதையமைப்போடு உருவாகியுள்ள இப்படத்தை எம்.பி.எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க, அறிமுக இயக்குநர் ஜெய் அமர்சிங் இயக்கியிருக்கிறார்.
பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவில் பணியாற்றிய ஆப்ரோ இசையமைத்திருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
இந்த நிலையில், ‘காலேஜ் ரோடு’ படத்தை சமீபத்தில் பார்த்த இயக்குநர் பா.இரஞ்சித், லிங்கேஷின் நடிப்பை வெகுவாக பாராட்டியதோடு, மாணவர்கள் கல்விக்கடன் மற்றும் அதன் அரசியலையும், சமூக பிரச்சனையையும் பேசினாலும் படம் கமர்ஷியலாக இருக்கிறது. நிச்சயம் மாணவர்களுக்கு படம் பிடிக்கும், என்று கூறியிருக்கிறார்.
இயக்குநர் பா.இரஞ்சித்தின் பாராட்டால் உற்சாகமடைந்துள்ள ‘காலேஜ் ரோடு’ படக்குழுவினர் வெளியீட்டுக்கான பணியில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...