பல படங்களில் நாயகனாக நடித்து வரும் மஹத் ராகவேந்திரா, நடிப்பில் ‘ஈமோஜி’ என்ற வெப் தொடர் உருவாகிறது. திருமணமான தம்பதி தாங்கள் இருவரும் பிரிய நினைக்க, அவர்களை காதல் இணைத்ததா?, இல்லையா? என்பதை மையப்படுத்திய உணர்வுபூர்பமான ஒரு காதல் கதையாக இத்தொடர் உருவாகியுள்ளது.
இதில் மஹத் ராகவேந்திராவுக்கு ஜோடியாக தேவிகா சதீஷ் மற்றும் மானசா என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் விஜே ஆஷிக், பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சென் எஸ்.ரங்கசாமி எழுதி இயக்கியுள்ள இந்த வெப் தொடரை ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.எச்.விக்ரம் இசையமைக்க, எம்.ஆர்.ரெஜீஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். வனராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
ஈமோஜி தொடரை Sen. S. ரங்கசாமி எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக ஜலந்தர் வாசன், கலை இயக்குநராக வனராஜ், R.H.விக்ரம் இசையமைப்பாளராகவும், M.R.ரெஜீஷ் படத்தொகுப்பாளராகவும், சந்தியா சுப்பவரபு ஆடை வடிவமைப்பாளராகவும், N.சந்திரசேகர் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
‘இருவர் ஒன்றானால்’ மற்றும் ‘பொற்காலம்’ ஆகிய படங்களை தயாரித்த ஏ.எம்.சம்பத், ‘ஈமோஜி வெப் தொடரை தயாரித்துள்ளார். இவர் இதற்கு முன்பாக தீனா, ரமணா படங்களில் கிரியேட்டிவ் டைரக்டராகவும், அமீர்கான் நடித்த கஜினி படத்தில் எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...