Latest News :

மலேசியாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘பூச்சாண்டி’ தமிழகத்தில் ரிலீஸ்
Saturday March-26 2022

ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்துள்ள ’பூச்சாண்டி’ என்ற தமிழ் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி ’பூசாண்டி வரான்’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் வெளியாக இருக்கிறது. இப்படம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி மலேசியாவில் ’பூச்சாண்டி’ என்ற தலைப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 

 

ஜெ.கே.விக்கி எழுதி இயக்கியுள்ள  இப்படத்திற்கு டஸ்டின் இசை அமைக்க, அசலிஷாம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் பணியை இயக்குநர் ஜெ.கே.விக்கியே செய்துள்ளார். இப்படத்தில், லோகன், தினேஷ், எஸ்.கிருஷ்ணன், கணேசன், மனோகரன், ரமணா, ஹம்ஷினி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். 

 

வரலாற்று நிகழ்வுகள் மற்றும் சில உண்மை சம்பவங்கள் பிண்ணணியோடு உருவாக்கப்படுள்ள இந்த திரில்லர் படத்தை மலேசிய தமிழ் மக்கள் வெகுவாக ரசித்ததை போல தமிழக மக்களும் ரசித்து மகிழ்வார்கள் என்று படக்குழு நம்புகிறது. 

வெள்ளித்திரை டாக்கீஸ் தயாரிப்பாளர், நடிகர் முஜீப் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடும் ‘பூ சாண்டி வரான்’ ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாகிறது.

Related News

8113

அரசியல் ஆன்மீகம் சினிமா! - கவனம் ஈர்க்கும் நடிகர் மை. பா. நாராயணன்
Tuesday January-21 2025

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...

’நிறம் மாறும் உலகில்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
Tuesday January-21 2025

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...

’மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ இளைஞர்களுக்குப் பிடித்த ஜாலியான படமாக இருக்கும் - இயக்குநர் பி.வாசு உறுதி
Tuesday January-21 2025

யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...

Recent Gallery