பாலா இயக்கத்தில் மூன்றாவது முறையாக சூர்யா நடிக்கும் படத்தில், அவர் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு ஹீரோவும் நடித்திராத வேடத்தில் நடிக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் டோலிவுட்டின் டாப் ஹீரோயின் கிரித்தி ஷெட்டி. இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா.
மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்திற்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மாயப்பாண்டி கலையை நிர்மாணிக்கிறார்.
18 ஆண்டுகளுக்கு பிறகு பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பதால், இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் பூஜையுடன் தொடங்கியது.
’சூர்யா 41’ என்ற தற்காலிக தலைப்போடு உருவாகும் இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. அந்நிறுவனத்தின் 19 வது படமாக உருவாகும் இப்படத்தை ஜோதிகா தயாரிக்க, ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.
இப்படம் துவங்கியது குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”மீண்டும் பாலா சாரின் 'ஆக்க்ஷன்' சப்தத்தை 18 ஆண்டுகளுக்கு பிறகு கேட்க துவங்கியதால் பெரும் மகிழ்ச்சி. வேண்டும் உங்கள் ஆசிகள்” என்று பதிவிட்டுள்ளார்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...