‘ராஜா ராணி’, ‘தெறி’ என்று இரண்டு வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் அட்லி, மூன்றாவதாக ’மெர்சல்’ படத்தை இயக்கியுள்ளார். ‘தெறி’, ‘மெர்சல்’ என விஜயுடன் இரண்டு படங்களில் அட்லி இணைந்தத்தால், அஜித் ரசிகர்கள் அவர் மீது பெரும் கோபத்தை கொண்டதோடு, அவரது படங்கள் அனைத்தும் பிற படங்களின் காப்பி என்று அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் இயக்குநர் அட்லியின் பிறந்தநாளின் போதும் கூட, அவரை வாழ்த்திய அஜித் ரசிகர்கள், அட்லி படங்களை வேறு சில பட்ங்களுடன் ஒப்பிட்டு, அட்லியை திருடன், காப்பி அடிப்பவர் என்றெல்லாம் சித்தரித்து மீம்ஸ்கள் வெளியிட்டது.
தொடர்ந்து தனது படங்கள் காப்பி என்று பலர் கூறி வருவதற்கு எந்த வித ரியாக்ஷனையும் காட்டாத அட்லி, திடீரென்று கோபமடைந்ததோடு, தனது படத்தை காப்பி என்று சொல்பவர்களுக்கு சவாலும் விட்டுள்ளார்.
இது குறித்து கூறிய அட்லி, “நான் மற்ற படங்களை பார்த்து காப்பி அடிக்குறேனா இது அப்பட்டமான பொய். ஒரு படத்தின் கதையை உருவாக்க நாங்கள் எப்படி போராடுகிறோம் தெரியுமா?, ஒரு அறையில் அமர்ந்து கொண்டு சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கதைக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
என்னை காப்பி என்று சொன்னவர்களுக்கு ’மெர்சல்’ படத்தில் ஒரு காட்சி இருக்கிறது. அதை பார்த்து விட்டு சொல்லுங்கள் எங்கள் உழைப்பு தெரியும். அதே போல என் திறமை தெரியும், என்று சாவல் விடுத்துள்ளார். மெர்சல் படத்தில் பல காட்சிகள் ரசிகர்களை மெர்சல் செய்யும். இதுவரை இப்படி ஒரு காட்சி வந்தது இல்லை என்று பேசும் அளவுக்கு வித்தியாசமாக இருக்கும், என்று கூறியுள்ளார்.
இயக்குநர் அட்லியின் இந்த சவால், அஜித் ரசிகர்களை கோபமடையச் செய்தாலும், விஜய் ரசிகர்களுக்கு புது உற்சாகட்தைக் கொடுத்திருக்கிறது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...