எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கடந்த 25 ஆம் தேதி வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்கள் மட்டும் இன்றி ஊடகங்களின் பாராட்டையும் பெற்றுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் தமிழ் பதிப்பை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டது. மேலும், விளம்பரத்தையும் மிக பிரம்மாண்டமான முறையில் செய்து வரும் நிலையில், உலகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.223 கோடியை வசூல் செய்த இப்படம், தற்போது ரூ.500 கோடியை கடந்துள்ளது.
விடுமுறை நாட்கள் மட்டும் இன்றி வார நாட்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடுவதால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதோடு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமாத்துறைக்கு மீண்டும் புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் படத்தின் கலெக்ஷன் தொடர்ந்து முன்னேற்றம் காண்பதால், நிச்சயம் ரூ.1000 கோடியை ‘ஆர்.ஆர்.ஆர்’ வசூல் செய்யும் என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்கள்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...