Latest News :

இணையத்தை அதிரவிட்ட விஜய் தேவரகொண்டாவின் ‘JGM'
Wednesday March-30 2022

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் சரித்திரம் படைக்கும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் இணைந்து, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, மும்பையில் நடந்த ஒரு உற்சாகமான நிகழ்வில், தங்கள் அடுத்த திரைப்படமான “JGM”  படத்தை இன்று அறிவித்தனர். இந்த பிரம்மாண்டமான ஆக்‌ஷன் டிராமா, பன் மொழி இந்திய பொழுதுபோக்கு திரைப்படம், நடிகர்  விஜய் தேவரகொண்டாவை இதுவரை கண்டிராத  பாத்திரத்தில் காண்பிக்கும், இது அவரது திரைப்பயணத்தில் அடுத்த திருப்புமுனையாக இருக்கும்!

 

JGM திரைப்படத்தை சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து  தயாரிக்கிறார்கள். திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்  பூரி ஜெகன்நாத். இந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படம்,  இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும், மற்றுமொரு அட்டகாசமான பொழுதுபோக்கு விருந்தாக இப்படம் இருக்கும். 

 

படம் பற்றி இயக்குனர் பூரி ஜெகன்னாத் பகிர்ந்துகொண்டதாவது.., “எங்கள் அடுத்த திரைப்படமான ‘JGM’ பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விஜய் தேவரகொண்டாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. JGM ஒரு வலுவான கதைகொண்ட, அதிரடி ஆக்‌ஷன் என்டர்டெய்னர்”

 

படம் குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியதாவது.., “JGM  எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. இப்படம் மிகவும் சவாலான திரைக்கதை கொண்டது. இந்த கதை மிகவும் சிறப்பு வாய்ந்தது, இப்படம் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும்  தொடும்.  இயக்குநர் பூரி ஜெகன்நாத் அவர்களின் கனவுத் திரைப்படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை அடைகிறேன். சார்மி மற்றும் அவரது குழுவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். JGM படத்தில் எனது கதாபாத்திரம் இதுவரை நான் செய்திராத புதுமையான பாத்திரம், மேலும் இது பார்வையாளர்களிடம் ஒரு அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

 

ஸ்ரீகாரா ஸ்டுடியோவின் தயாரிப்பாளர் வம்ஷி பைடிப்பள்ளி கூறுகையில், “இந்த அற்புத திரைப்படமான  JGM படத்தில் விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படம் ஒவ்வொரு இந்தியனின் மனசாட்சியையும் தட்டிவிடும் என்று ஸ்ரீகாரா ஸ்டுடியோவில் உள்ள நாங்கள் அனைவரும்  நம்புகிறோம்.

 

பூரி ஜெகன்நாத் எழுதி இயக்கும் இப்படத்தை பூரி கனெக்ட் & ஸ்ரீகாரா ஸ்டுடியோ இணை தயாரிப்பு செய்ய,  சார்மி கவுர், ஸ்ரீகாரா ஸ்டுடியோ தயாரிப்பாளர் வம்ஷி பைடிப்பள்ளி, ஸ்ரீகாரா ஸ்டுடியோவின் இயக்குனர் சிங்கராவ் ஆகியோர் தயாரிக்கின்றனர். 

 

ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கி உலகின் பல நாடுகளில் தொடர்ந்து நடைபெற உள்ள இப்படம், 2023 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

Related News

8125

அரசியல் ஆன்மீகம் சினிமா! - கவனம் ஈர்க்கும் நடிகர் மை. பா. நாராயணன்
Tuesday January-21 2025

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...

’நிறம் மாறும் உலகில்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
Tuesday January-21 2025

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...

’மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ இளைஞர்களுக்குப் பிடித்த ஜாலியான படமாக இருக்கும் - இயக்குநர் பி.வாசு உறுதி
Tuesday January-21 2025

யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...

Recent Gallery