கமல்ஹாசன் நடித்து, தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘விக்ரம்’. இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் ஒடிடி மற்றும் தொலைக்காட்சி வெளியீட்டுக்கான வியாபாரம் மிகபெரிய அளவில் நடைபெற்றிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் ‘விக்ரம்’ பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி பெற்றிருப்பது எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...