Latest News :

’டாணாக்காரன்’ நடிகனாக என் திறமையை வெளிப்படுத்தும் - விக்ரம் பிரபு நெகிழ்ச்சி
Thursday March-31 2022

அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர் நடித்துள்ள படம் ‘டாணாக்காரன்’. இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதோடு, பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம், காவல்துறை பயிற்சி மையத்தில் நடைபெறும் கதையம்சம் கொண்ட இப்படத்தில், காவல்துறை பயிற்சி மையத்தில் நடக்கும் மோசடிகளையும், அராஜகங்களையும் இப்படம் தோலுறித்துக் காட்டும் வகையில் டிரைலர் அமைந்திருந்தது.

 

பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, பி.கோபிநாத் மற்றும் ஆர்.தங்க பிரபாகரன் ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படம் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

 

இந்த நிலையில், ‘டாணாக்காரன்’ படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில், நடிகர் விக்ரம் பிரபு, நடிகை அஞ்சலி நாயர், இயக்குந தமிழ், நடிகர் போஸ் வெங்கட், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட படக்குழுவினர்கள் கலந்துக்கொண்டார்கள்.

 

படம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகர் விக்ரம் பிரபு, “‘டாணாக்காரன்’ என்ற தலைப்பே மிகவும் அழுத்தமாக இருந்தது, இந்த ஸ்கிரிப்டை கேட்ட பிறகு, இதில் நடித்தே ஆக வேண்டும் என முடிவு செய்தேன், ஒரு நடிகராக எனது திறமையை வெளிப்படுத்தும் படைப்பாக  இருக்கும். தமிழ் திரையுலகில் படைப்பாற்றல் மற்றும் திறமையாளர்களை கண்டெடுத்து, வளர்க்கும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் போன்ற தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிவது, ஒரு அற்புதமான அனுபவம். தயாரிப்பாளர்களின் ஆதரவு இல்லையென்றால், டாணாக்காரன் இவ்வளவு திருப்திகரமான வெளியீட்டைக் கண்டிருக்க முடியாது.

 

இயக்குநர் தமிழ் இந்தப் படத்தை தன் உயிராக வடிவமைத்து,  மிக அற்புதமான படைப்பாகச் செதுக்கியுள்ளார். டாணாக்காரன் படத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்திருக்கும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் வெளியீட்டுக்கு நன்றி. டாணாக்காரன் மூலம் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவம் கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

 

Taanakkaran Press Meet

 

இயக்குநர் தமிழ் பேசுகையில், “என்னுடைய படத்துக்கு இத்தனை ஆசீர்வாதங்கள் கிடைத்திருப்பது என்னைப் போன்ற ஒரு இயக்குநருக்கு மிகவும் பெருமை. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இந்திய ஓடிடி தளங்களில் சிறந்து விளங்கும் முன்னணி ஓடிடி அடையாளமாக மாறியுள்ளது, அத்தளத்தில் சிறந்த திரைப்படங்கள் சிறப்பாக அங்கீகரிக்கப்பட்டு, பரந்த அளவில் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

 

டாணாக்காரன் திரைப்படத்தின் மீது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆர்வம் காட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கதையின் மீது நம்பிக்கை வைத்த எனது தயாரிப்பாளர்களான எஸ்.ஆர்.பிரபு, பி.கோபிநாத் மற்றும் ஆர்.தங்க பிரபாகரன் ஆகியோருக்கு நன்றி. இந்த ஸ்கிரிப்டை வைத்து நான் பல தயாரிப்பு நிறுவனங்களை அணுகியபோது, முதலில் அனைவரும் தயங்கினர், திரைக்கதையில் பல மாற்றங்களை செய்யப் பரிந்துரைத்தனர். ஆனால், பொட்டன்ஷியல் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர்கள் அத்தகைய மாற்றங்கள் எதையுமே சொல்லவில்லை, இது எனக்கு மிகுந்த ஆச்சரியம் அளித்தது.

 

மேலும் எனது இயக்கத்தில் எந்த குறையும் வராமல் இருக்க, அவர்கள் ஒரு பெரிய பட்ஜெட்டை படத்திற்காக  செலவழித்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்த விக்ரம் பிரபு சாருக்கு நன்றி. அவர் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார், மேலும் அவரது நடிப்பை பார்வையாளர்கள் விரும்புவார்கள், பெரிதும் பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன். அஞ்சலி நாயர், லால் சார், எம்.எஸ்.பாஸ்கர் சார் மற்றும் இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞர்களும் படத்தின் தரத்தை உயர்த்தி இருக்கிறார்கள். ஏப்ரல் 8, 2022 முதல், ரசிகர்களின் பாராட்டை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

 

இப்படத்தின் படப்பிடிப்புக்காக சரியான இடங்களை தேடி இயக்குநர் தமிழ், தமிழ்நாடு மற்றும் கேரளா முழுவதும் 40 நகரங்களுக்கு மேல் பயணித்துள்ளார். மேலும், இப்படத்திற்காக நிறைய ஆய்வுகளை மேற்கொண்ட படக்குழு, மிக கடினமாக உழைத்துள்ளது. படத்தின் அணிவகுப்பு காட்சிகளுக்கு தீவிர பயிற்சி தேவைப்பட்டதால், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், காவலர்கள் மற்றும் போலீஸ் பயிற்சியாளர்களை படத்தில் நடிக்க வைத்துள்ளனர்.

 

காவல் துறை சார்ந்த எண்ணற்ற திரைப்படங்களை தமிழ் சினிமா பார்த்திருந்தாலும், டாணாக்காரன் பார்வையாளர்களுக்கு அறிமுகமில்லாத ஒரு புதிய பார்வையை, ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும்.

 

தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பொழுதுபோக்கு பிளாக்பஸ்டர்  திரைப்படங்கள் மற்றும் பிரீமியம் தொடர்களை உலகளவில் ரசிகர்களுக்காக வழங்கி வரும்  டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில், டாணாக்காரன் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகிறது.

Related News

8129

நாயகன் ராதாரவியின் 50 வது வருடத்தை கொண்டாடிய ‘கடைசி தோட்டா’ படக்குழு!
Sunday July-07 2024

‘லோக்கல் சரக்கு’ படத்தை தொடர்ந்து ஆர்...

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘செளகிதார்’ தொடங்கியது!
Friday July-05 2024

நடிகர் பிருத்வி அம்பர் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான ‘செளகிதார்’ படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள பந்தே மகாகாளி கோவிலில் சிறப்பான பூஜையுடன் தொடங்கியது...

’கூழாங்கல்’ பட தயாரிப்பாளரின் அடுத்த முயற்சி ’ஜமா’!
Friday July-05 2024

‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் (Learn & Teach Productions) நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது...