மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்ட எத்தனையோ படங்கள் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய்விடுகிறது. ஆனால், எந்தவித ஆடம்பரமும் இன்றி, கதைக்களம் மற்றும் அதை படமாக்கிய விதத்திற்காக ஊடங்களின் பாராட்டையும், ரசிகர்களின் வரவேற்பையும் பெற்று சத்தமில்லாமல் சாதிக்கும் சில படங்களும் அவ்வபோது வந்துக்கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில், சமீபத்தில் தியேட்டர்களில் வெளியான ‘பூ சாண்டி வரான்’ திரைப்படம் ஊடங்களின் பாராட்டை பெற்றதோடு, படம் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி ஈர்த்து வருகிறது.
முழுக்க முழுக்க மலேசிய தமிழ் கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் மிர்ச்சி ரமணா நடித்திருக்கிறார். இவரை தவிர்த்து படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் லோகன், தினேஷ் கே.கிருஷ்ணா, கணேசன் மனோகரன், ஹம்சினி பெருமாள் என அனைவரும் மலேசிய தமிழ் கலைஞர்கள்.
படத்தை இயக்கியிருப்பவர் ஜே.கே.விக்கி, டிரையும் ஸ்டுடியோஸ் ஆர்பில் ஆண்டி தயாரித்திருக்கும் இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘பூச்சாண்டி’ என்ற தலைப்பில் மலேசியாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
தற்போது தமிழ்நாட்டில் ‘பூ சாண்டி வரான்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ஊடகங்களும், ரசிகர்களும் படம் மற்றும் நடிகர்கள் குறித்து வெகுவாக பாராட்டி வந்தாலும், தமிழ்நாட்டில் பல தியேட்டர்களில் இந்த படத்திற்கு காலை காட்சி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. அலுவலக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதால் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு பலருக்கு கிடைக்காமல் போவதை எண்ணி படக்குழு சற்று கவலை அடைந்துள்ளது.
இந்த நிலையில், சென்னை ரோஹினி தியேட்டரில் ‘பூ சாண்டி வரான்’ படத்திற்கு நாளை (ஏப்ரல் 4) மாலை காட்சி, அதாவது மாலை 7 மணி காட்சி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நேரத்தில் தியேட்டருக்கு மக்கள் அதிகமானோர் வருவார்கள், அப்படி வந்து தங்களது படத்தை பார்த்தால், அவர்களது பாராட்டு காரணமாக படத்துக்கு மவுத் டாக் நிச்சயம் கிடைக்கும் என்று படக்குழு நம்பிக்கையோடு இருக்கிறது.
மேலும், இந்த படம் திகில் படமாக தொடங்கி, சரித்திர பின்னணியில் இதுவரை நாம் அறியாத ஒன்றுக்கு எளிமையான ஒரு விளக்கத்தையும் கொடுத்திருக்கிறது. ‘பூ சாண்டி வரான்’ படத்தை பார்ப்பவர்கள் அப்படத்தால் வியப்படையாமல் இருக்கவும் முடியாது, படத்தை பாராட்டாமலும் இருக்க முடியாது என்பது தவிர்க்க முடியாத உண்மை.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...