நிவின் பாலி நடிப்பில், அப்ரித் ஷைனி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மஹா வீர்யார்’. 1983 மற்றும் ஆக்ஷன் ஹீரோ பிஜு ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகர் நிவின் பாலியும், இயக்குநர் அப்ரித் ஷைனியும் இணைந்துள்ளனர்.
பாலி ஜே.ஆர் பிக்சர்ஸ் மற்றும் இந்தியன் மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் சாப்ரில் நிவி பாலி, பி.எஸ்.சம்னாஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஆசிப் அலி, லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஸ்ரீவஸ்தவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், சுதிர் கரமனா, கிருஷ்ண பிரசாத், பத்மராஜ் ரதீஷ், சுதீர் பரவூர், கலாபவன் பிரஜோத், பிரமோத் வெளியநாட், ஷைலஜா பி அம்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
விருது பெற்ற எழுத்தாளர் எம்.முகுந்தனின் கதையை தழுவி உருவாகும் இப்படம் டைம் டிராவல், ஃபேண்டஸி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை சுற்றி, உணர்வுப்பூர்வமான தருணங்களுடன், பொழுதுபோக்கு நிறைந்த படமாகவும் உருவாகிறது.
இஷான் சாப்ரா இசையமைக்கும் இப்படத்திற்கு சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மனோஜ் படத்தொகுப்பு செய்ய, விஷ்ணு கோவிந்த ஒலிக்கலவை கவனிக்க, அனீஸ் நாடோ கலையை நிர்மாணித்துள்ளார்.
மிகபிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளதால், நடிகர் நிவின் பாலி மகிழ்ச்சியடைந்துள்ளார்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...