லட்சுமி மேனன் மற்றும் யோகி பாபு முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மலை’. இயக்குநர்கள் சீனு ராமசாமி, சுசீந்திரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஐ.பி.முருகேஷ், இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
லெமன் லீப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிட். நிறுவனம் சார்பில் ஆர்.கணேஷ் மூர்த்தி சௌந்தர்யா தயாரிக்கும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுதுகிறார். காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்ய, பாஸ்கர் சக்தி வசனம் எழுதுகிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் ஐ.பி.முருகேஷ் கூறுகையில், “இந்தப் படம் மலைப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை மையமாக கொண்டு உருவாகவுள்ளது, மலை படத்தில் ஒரு கதாப்பாத்திரமாகவே இருக்கும். இந்தப் படத்தில் நடிகை லட்சுமி மேனன் நகரத்தில் இருந்து கிராமத்துக்கு வரும் ஒரு மருத்துவராக நடிக்கிறார், அந்த கிராமத்தில் அவருக்கு நடக்கும் நிகழ்வுகள் அவரது வாழ்க்கையை மாற்றி விடுகிறது , நடிகர் யோகி பாபு இந்தப் படத்தில் மிகவும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார், லட்சுமி மேனன், யோகிபாபு இருவருக்கும் இடையே நடக்கும் நிகழ்வு இப்படத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது, மேலும் காளி வெங்கட் கதாபாத்திரம் அனைவராலும் பெரிதும் பேசப்படும், சிங்கம்புலி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரிடன் மேலும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கவுள்ளனர்.
இந்தப் படத்தில் நடிகை லட்சுமி மேனன், நடிகர் யோகி பாபு ஜோடியாக நடிக்கவில்லை என்பதை உறுதி படுத்தினார், ஆனால் இருவரின் கதாபாத்திரம் திரையில் சுவாரசியத்தை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.” என்றார்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...