சென்னையின் பழமை வாய்ந்த கல்லூரியில் நடக்கும் காதல் மற்றும் மாணவர்கள் அரசியலை அடிப்படையாக கொண்டு உருவாகும் படம் ‘இயல்வது கரவேல்’. இதில் கதிர் நாயகனாக நடிக்க ,அவருக்கு வில்லனாக மாஸ்டர் மகேந்திரன் நடிக்கிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த யுவலக்ஷ்மி முதல் முறையாக இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.
எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் டேனியல் கிரிஸ்டோபர் மற்றும் தென்னிலவன் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.எல்.எஸ். ஹென்றி இயக்குகிறார்.
நிஜத்தில் கதிரும் மாஸ்டர் மகேந்திரனும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் நிஜத்தில் எப்படிப்பட்ட நெருங்கிய நண்பர்கள் என்பது இவர்களுடன் பழகி வரும் இவர்களின் நட்பு வட்டாரத்தில் ரொம்பவே பிரசித்தம்
சினிமாவில் எத்தனையோ படங்களில் ஒருவருக்கொருவர் விறைப்பும் முறைப்புமாக மல்லுக்கட்டும் ஹீரோ வில்லன்கள் நிஜத்தில் நெருங்கிய நண்பர்களாக இருப்பதை கண்கூடாக நாம் பார்த்திருக்கிறோம் .
இப்படி நிஜத்தில் நண்பர்களாக இருப்பவர்கள் திரையில் எதிரிகளாக மாறுவது படத்தின் மீதான சுவாரசியத்தை இன்னும் அதிகப்படுத்தவே செய்யும். அதிலும் குறிப்பாக மாஸ்டர் மகேந்திரனை இதுவரை பார்த்திராத ஒரு புதிய கோணத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்திலும் இந்தப்படத்தில் பார்க்கலாம் என திரையுலக வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...