Latest News :

பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவான இணைய தொடர் ’ஆனந்தம்’
Monday April-04 2022

‘கண்ட நாள் முதல்’, ‘கண்ணாமூச்சி ஏனடா’ போன்ற படங்களை இயக்கிய பிரியா.வி, எழுதி இயக்கியிருக்கும் இணைய தொடர் ‘ஆனந்தம்’. நடிகர் பிரகாஷ் ராஜ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்தொடரில் அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ் மற்றும் மிர்னா மேனன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

1964 - 2015 வரை ஒரு வீட்டில் வாழ்ந்த நபர்களின் வாழ்வில் நடந்த , உணர்ச்சிகரமான தருணங்களை, பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.  ஒரு குடும்பத்தில் இருந்து பிரிந்த மகன், மீண்டும் தன் வீட்டை பல காலம் கழித்து பார்வையிடுவதில் இதன் கதை தொடங்குகிறது. அவர் 'அனந்தம்' என்று பெயரிடப்பட்ட தனது மூதாதையரின் வீட்டிற்கு மீண்டும் வருகை தருகிறார், அந்த வீட்டில் வாழ்ந்த தருணங்களின்,  ஆச்சரியம், துரோகம், வெற்றி, காதல், சிரிப்பு, என அனைத்தும் கலந்த நினைவுப் பயணம் தான் இத்தொடரின் கதை.

 

ஹேப்பி யூனிகார்ன் சார்பில் வி.முரளி ராமன் தயாரிக்கும் இத்தொடரின் திரைக்கதையை பிரியா.வி, ராகவ் மிர்தாத், ப்ரீத்த ஜெயராமன், ரீமா ரவிச்சந்தர் ஆகியோர் எழுதியுள்ளனர். பிரியா.வி மற்றும் ராகவ் மிர்தாத் வசனம் எழுத, பகத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.எஸ்.ராம் இசையமைக்க சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்துள்ளார்.

 

மொத்தம் 8 பாகங்களை கொண்ட ‘ஆனந்தம்’ இணைய தொடர் ஜீ5 ஒரினலாக வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகிறது.

Related News

8138

அரசியல் ஆன்மீகம் சினிமா! - கவனம் ஈர்க்கும் நடிகர் மை. பா. நாராயணன்
Tuesday January-21 2025

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...

’நிறம் மாறும் உலகில்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
Tuesday January-21 2025

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...

’மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ இளைஞர்களுக்குப் பிடித்த ஜாலியான படமாக இருக்கும் - இயக்குநர் பி.வாசு உறுதி
Tuesday January-21 2025

யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...

Recent Gallery