’டெடி’ படத்தை தொடர்ந்து ஆர்யா - இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘கேப்டன்’. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
ஆர்யா துப்பாக்கியுடன் நிற்க அவர் பின்புறம், வித்தியாசமான மிருகன் ஒன்று இருக்கும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர், பார்வையாளர்களை ஆச்சர்யத்தின் உச்சிக்கு அழைத்துச் செல்லும் வகையில், அனைவரையும் ஈர்க்கும் படி அமைந்துள்ளது.
நம்பமுடியாத ஆச்சர்யமான உண்மை என்னவென்றால், இந்த பர்ஸ்ட் லுக்கை உருவாக்க, படக்குழு ஒன்றரை ஆண்டுகள் உழைத்துள்ளது. கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்ட பாத்திரம் சரியான நிலையை அடைய, ஒவ்வொரு மூலக்கூறும் பிக்சல்கள் மூலம் வளர்க்கப்பட வேண்டும். இந்த பர்ஸ்ட்லுக் உருவாக்கியதன் முக்கிய நோக்கம், இதுவரை பார்த்திராத சிறப்பான திரை அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தரவேண்டும் என்பதே ஆகும். தவிர, இந்த சிங்கிள் ப்ரேம், திரைப்படத்தை பற்றிய ஒரு வடிவத்தை தருகிறது, ரத்தம் சூடுபிடிக்கும் பரபர திரில் சவாரியாக இப்படம் இருக்கும்.
இந்த திரைப்படத்திற்காக ஆர்யா தந்த அயராத உழைப்பு, தீராத அர்ப்பணிப்பு குறித்து தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆர்யா எனும் அற்புதமான நடிகர் 'கேப்டன்' படத்திற்கு ஆன்மாவைக் கொடுத்தார் என்று முழு படக்குழுவும் சொல்லி வருகிறார்கள். மேலும் இந்த படத்தில் அவரது கதாபாத்திர தோற்றத்தை வெளியிட படக்குழுவினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
திங் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஆர்யாவைத் தவிர இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.
டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை கார்கி எழுதியுள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் இ.ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். ஆர்.சக்தி சரவணன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, எஸ்.எஸ்.மூர்த்தி கலையை நிர்மாணித்துள்ளார். வி.அருண்ராஜா கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஹெட்டாக பணியாற்றுகிறார்.
நடிகர் ஆர்யாவின் முந்தைய படங்களான சார்ப்பட்டா பரம்பரை மற்றும் டெடி ஆகியவை இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்றதால், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் ‘கேப்டன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...