Latest News :

விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தின் கதை இது தான்!
Friday April-08 2022

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘கொலை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் அவர் துப்பறியும் நபராக நடிக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் ரித்திகா சிங், போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜான் விஜய், ராதிகா சரத்குமார், முரளி சர்மா, மீனாட்சி சவுத்ரி, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார், சம்கித் போரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

’விடியும் முன்’, மற்றும் ’9 லைவ்ஸ் ஆஃப் மாறா’ போன்ற படங்களை இயக்கிய பாலாஜி குமார் 'கொலை' படத்தை எழுதி இயக்கியுள்ளார். இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ் நிருவனம் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப்.பி, பங்கஜ் போரா, எஸ்.விக்ரம் குமார் ஆகியோர் டான்ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை, லோட்டஸ் பிக்சர்ஸ் சித்தார்த்தா சங்கர், அசோக் குமார் ஆகியோருடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

 

படம் குறித்து இயக்குநர் பாலாஜி குமார் கூறுகையில், “’கொலை திரைப்படம்  1923 இல் நடந்த டோரதி கிங்கின் கொலை சம்பவத்தால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும், அந்த கொலை சம்பவம் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அந்த கொலையின் பின்னால் உள்ள மர்மத்தை உடைக்க உலகம் துடித்தது. இப்படத்தின் இறுதி திரைக்கதை பிரதிக்கு முன்  30 மாதிரி வரைவுகளில் வேலை செய்ய வேண்டியிருந்தது, கதையை  நவீன கால பின்னணிக்கு ஏற்றவாறு மாற்ற இந்த தேவை இருந்தது.  கதை லீலா என்ற அழகான மாடலைப் பற்றியது, அவர் தனது மேல்தட்டு குடியிருப்பில் கொலை செய்யப்படுகிறார். அவளுக்குத் தெரிந்த ஐந்து ஆண்களில் , ஒவ்வொருவரும் லீலா இறக்க வேண்டி விரும்புவர்களாக இருக்கிறார்கள். அதில் கொலையாளி யார் என்பது மர்மம். துப்பறியும் நபரான விநாயக் பல ஆண்டுகளாக தனிப்பட்ட சோகத்தால் களப்பணிகளில் இருந்து விலகி, முடங்கி இருக்கிறார். இந்த கொலை வழக்கு சிக்கலானதாக இருப்பதால், காவல்துறைக்கு வேறு வழிகள் இல்லை, கொலை மர்மத்தை உடைக்க அவரை மீண்டும் கொண்டு வர வேண்டும். மர்மத்தைத் தீர்க்கும் வல்லவராக அவர் இருக்கிறார். ரித்திகா சிங் இப்படத்தில் சந்தியாவாக நடிக்கிறார், அவர் தனது உயரதிகாரியான விநாயகின் கீழ் வேலை செய்து வழக்கின் மர்மங்களை கண்டறிந்து அதைத் தீர்க்க வேண்டும்.” என்றார்.

 

Kolai

 

சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கிரீஷ் கோபாலாகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். ஆர்.கே.செல்வா படத்தொகுப்பு செய்கிறார்.

Related News

8152

அரசியல் ஆன்மீகம் சினிமா! - கவனம் ஈர்க்கும் நடிகர் மை. பா. நாராயணன்
Tuesday January-21 2025

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...

’நிறம் மாறும் உலகில்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
Tuesday January-21 2025

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...

’மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ இளைஞர்களுக்குப் பிடித்த ஜாலியான படமாக இருக்கும் - இயக்குநர் பி.வாசு உறுதி
Tuesday January-21 2025

யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...

Recent Gallery