இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பி.பிரதீப், பங்கர் போரா ஆகியோர் தயாரிப்பில் விஜய் ஆண்டனில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று ‘ரத்தம்’. ‘தமிழ்ப் படம்’ புகழ் சி.எஸ்.அமுதன் இயக்கும் இப்படத்தின் இந்திய படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதை தொடர்ந்து இப்படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது.
மாஸ் கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் என மூன்று நாயகிகள் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ் , ஓ.ஏ.கே.சுந்தர், மீஷா கோஷல் மற்றும் அமேயா ஆகியோருடன், ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஜெகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கண்ணன் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். தெருக்குரல் அறிவு ஒரு தீம் பாடலை எழுதி பாடியிருக்கிறார்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...