Latest News :

ரோட்டில் கூட்டம் போட்டு பேசுவேன் - நடிகர்களை எச்சரித்த கே.ராஜன்
Monday April-11 2022

தயாரிப்பாளர்களுக்கு நஷ்ட்டம் ஏற்படுத்தும் நடிகர்கள் யார் யார்? என்ப்தை ரோட்டில் கூட்டம் போட்டு பேசுவேன், என்று தயாரிப்பாளர் கே.ராஜன், ‘கம்பெனி’ திரைப்பட டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஸ்ரீ மகானந்தா சினிமஸ் நிறுவனம் சார்பில் ஆர்.முருகேசன் தயாரித்திருக்கும் படம் ‘கம்பெனி’. எஸ்.தங்கராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாண்டி, முருகேசன், திரேஷ் குமார், பிரித்வி, வலினா, காயத்ரி, வெங்கடேஷ், ரமா, சஞ்ஜீவ் பாஸ்கரன், சேலம் ஆர்.ஆர். தமிழ்செல்வன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

 

ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜுபின் இசையமைத்துள்ளார். விவேகா பாடல் எழுதியுள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் கே.ராஜன், நாக் ஸ்டுடியோ கல்யாணம், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், சேலம் ஆர்.ஆர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். பாரதிராஜா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து

 

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஆர்.முருகேசன், “இந்த படத்தை முடிப்பதற்குள் நான் பல போராட்டங்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டேன். படம் தொடங்கிய உடன் கொரோனா பிரச்சனை வந்தது. அது முடிந்த பிறகு இந்த படத்தில் நடித்த என் மகனுக்கு காலில் அடிபட்டு விட்டது. அதனால் சுமார் 3 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. அவருக்கு உடல்நிலை சரியானதும் மீண்டும் கொரோனா பிரச்சனை, இப்படி பல பிரச்சனைகளை சந்தித்து தான் இந்த படத்தை முடித்தேன். நான் இளம் வயதில் நிறைய சிரமப்பட்டிருக்கிறேன். இதே வடபழனி பகுதியில் உணவின்றி சுற்றி  திரிந்திருக்கிறேன், ஒரு நாள் பசியால் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். அப்படி பல கஷ்ட்டங்களை சந்தித்தாலும், வாழ்க்கையில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற லட்சியத்தோடு இந்த இடத்தில் வந்து நிற்கிறேன். ஏதோ பிறந்தோம், இறந்தோம் என்று வாழாமல், நான் பிறந்தேன், சாதித்தேன் என்று காட்ட வேண்டும், என்ற லட்சியத்தோடு இந்த படத்தை தயாரித்திருக்கிறேன். படத்தையும், படக்குழுவினரையும் வாழ்த்த வந்த அனைவரையும் வணங்கி வரவேற்கிறேன், நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய எங்கள் திரையுலகின் தலைவர் பாரதிராஜா சார் உள்ளிட்ட அனைத்து விருந்தினர்களுக்கும், சிறந்த இசையமைத்த இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், அற்புதமான எடிட்டிங் செய்திருக்கும் எடிட்டர் அனைவருக்கும் வாழ்த்துகள். நான் ஒரு பார்வையாளராக தான் இந்த டிரைலரையும், பாடல்களையும் பார்த்தேன், மிக சிறப்பாக இருந்ததோடு, எந்தவித முக சுழிப்போம் இல்லாமல் பார்க்க முடிந்தது. அதுமட்டும் அல்ல, பாடல் காட்சியில் நாயகன், நாயகி முத்தக் கொடுப்பது போல் நெருங்கி வருகிறார்கள், ஆனால் கொடுக்கவில்லை. அப்படி தான் இருக்க வேண்டும். ஆனால், சில ஹீரோக்கள் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கிறார்கள். இவையெல்லாம் வேண்டும் தான், ஆனால் அளவாக இருக்க வேண்டும். எந்த நேரமும் இச்சி....இச்சி....என்று கொடுக்க கூடாது, பிறகு போடா எச்ச பயலே, என்று சொல்லி விடுவார்கள். இதெல்லாம் சினிமாவுக்கு தேவை தான், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், நம் பண்பாடு, கலாச்சாரம் கெடாமல் அளவாக வைக்க வேண்டும். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி காலங்களில் இதுபோன்ற காட்சிகள் வைத்தார்கள், ஆனால், நெருங்கி வரும்போது, இரண்டு கிளிகளை காட்டிவார்கள் அல்லது மலர்கள் மோதிக்கொள்வது போல் காட்டுவார்கள். ஏன், பாரதிராஜாவின் சிஷ்யர் பாக்யராஜ் படங்களில் இல்லாததா, ஆனால் அதை அவர் நகைச்சுவையாக செய்வார், அதனால் அதில் எந்த பாதிப்பும் இருக்காது, அதுபோல தான் வைக்க வேண்டும். என் தங்கை, தாய், பாட்டி, அக்கா என அனைவரும் பார்க்க வேண்டும். கலாச்சாரம் கெடாமல் படம் எடுக்க வேண்டும், அப்படி தான் இவர்கள் எடுத்திருக்கிறார்கள், அதற்காகவே இந்த படம் வெற்றி பெறும்.

 

தயாரிப்பாளர் முருகேசன் பட்டபாட்டை அப்படியே சொன்னாரு. தமிழ் செல்வன் கஷ்ட்டப்பட்டதை சொன்னாரு, அவர் சொன்னரு, டேபிள் தொடைத்து, வண்டி கடை வைத்து இப்போது 28 கிளைகள் வைத்திருப்பாதாக சொன்னாரு. உண்மை தான் தம்பி, ஆனால், இங்கு அதுபோல் வளர முடியாது. தயாரிப்பாளரை க்ளோஸ் பண்ணிட்ராங்க தம்பி. உங்கள போல் வளர்ந்து வளர்ந்து வர முடியாது. நீங்க 28 கடை இருக்குனு சொல்லும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், என் தயாரிப்பாளர் 28 படம் எடுத்தேன் என்று சொல்ல சொல்லுங்க முடியாது. பாரதிராஜா காலத்தில் இருந்தது, அப்போது உதவி செய்தார்கள். ஆனால், இப்போது யாரும் தயாரிப்பாளருக்கு உதவி செய்வதில்லை. பாரதிராஜா சாரிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், கடந்த 10 வருடங்களாக சுமார் 1000 படங்கள் எடுத்தார்களே அந்த தயாரிப்பாளர்கள் இப்போது எங்கே, ஏன் அவர்கள் படம் எடுக்கவில்லை? அனைவரும் நலிந்து போய்விட்டார்கள். சினிமா நல்ல தொழில், ஆனால் யாரும் உதவி செய்வதில்லை. குறிப்பாக நடிகர்கள் எந்தவித உதவியும் செய்வதில்லை. டப்பிங் முன்பாக முழு சம்பளத்தையும் கேட்டு நிற்கிறார்கள், அப்போது என் தயாரிப்பாளர் என்ன செய்வார், எங்கு போவார். நீங்க சம்பாதித்து வீடு வாங்கிட்டு போகணும், என் தயாரிப்பாளர் வீட்டை வித்துட்டு ரோட்டுக்கு வரணுமா. ஒரு மளிகை கடை வைத்து நஷ்ட்டம் அடைந்தால் கூட, அதில் போட்ட தொகையில் 70 சதவீதம் திரும்ப வருகிறது. ஆனால், என் தயாரிப்பாளர் செய்யும் முதலீடுக்கு என்ன வருகிறது, முழுவதுமாக நஷ்ட்டம் தான் அடைகிறார்.

 

டிவியில் இருந்து ஒரு நடிகர் சினிமாவுக்கு நடிக்க வந்திருக்கிறார். அவருக்கு ஒரு தயாரிப்பாளர் 12 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி நடிக்க வைத்திருக்கிறார். அதற்கு அந்த நடிகர் படப்பிடிப்பு துவங்கும் முன்பு 8 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் படப்பிடிப்பு முடிந்த பிறகு மீதியுள்ள 4 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும், என்று ஒப்பந்தம் போட்டிருக்கிறார். அதற்கு தயாரிப்பாளரும் சம்மதம் சொல்லி படப்பிடிப்பு நடந்திருக்கிறது. படப்பிடிப்பு முடிய நான்கு நாட்கள் இருக்கும் நிலையில், அந்த நடிகர் பாக்கி தொகையை கொடுத்தால் தான் நடிப்பேன், என்று கூறியிருக்கிறார். இது நியாயமா. அந்த நடிகர் யார் என்பதை அடுத்த மேடையில் நிச்சயம் சொல்வேன். நான் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன், அனைவரையும் தட்டி கேட்பேன், என்னை யாராலும் தடுக்க முடியாது. அப்படி இங்கு பேசுவதை தடுத்தால், ரோட்டில் மீட்டிங் போட்டு பேசுவேன், இனி இவர்களை விடுவதாக இல்லை.

 

முருகேசன் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார், தங்கராஜ் சிறப்பாக இயக்கியுள்ளார். பாடல் சிறப்பாக உள்ளது. முன்னோட்டம் மற்றும் பாடல் காட்சியை பார்த்த போது படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது. சரியான முறையில் விளம்பரம் செய்தால் கம்பெனி கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும், வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், “என் இனிய தமிழ் மக்களே, என் சக தோழர்களே நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். தயாரிப்பாளர் பேசும் போது ரொம்ப கஷ்ட்டப்பட்டு வந்திருப்பதாக சொன்னார். நீங்க கஷ்ட்டப்பட்டு வந்தால் தான் இதை அனுபவிக்க முடியும். இதே வடபழனியில் தெரு தெருவாக சோத்துக்கே வழி இல்லாமல் அலைந்தவன் தான் பாரதிராஜா. சினிமா லவ்வபல் வேர்ட், இது யாரையும் கைவிடாது, நீங்க சினிமாவ லவ் பண்ணீங்கனா அது உங்கள் லவ் பண்ணும். ஒரு வேலை செய்யும் போது அதில் ஒரு தாக்கம் வேண்டும், அப்படி இருந்தால் தான் வெற்றி பெற முடியும். இதில் நடித்திருக்கும் பசங்கள பார்க்கும் போதே படம் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது.

 

இதில் தயாரிப்பாளரின் மகன் நடித்திருக்கிறார். அவருக்கு நல்ல அப்பா கிடைத்திருக்கிறார். நான் எல்லாம் எந்த பின்புலம் இல்லாமல் வந்தேன். பாடல் சிறப்பாக இருந்தது. இசையமைப்பாளர் பேசும் போது தன்னடக்கத்தோடு பேசினார். அது தான் அவரை பெரிய இடத்திற்கு அழைத்து செல்லும். ஆனால், பெரிய இடத்துக்கு போன பிறகும் இப்படியே இருக்க வேண்டும். பலர் பாராட்டுவார்கள் ஆனால், அதையெல்லாம் நாம் தலையில் தூக்கி வைத்துக்கொள்ள கூடாது, கக்கத்தில் வைக்க வேண்டும். நான் அப்படி தான் செய்வேன். என்னை இமயம், அப்படி இப்படினு சொல்லுவாங்க, அது அவங்களுக்கு தான், அவங்க சொல்றாங்க நமக்கு என்ன என்று ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில் விட்டுவிடுவேன்.

 

இங்கு பேசிய தயாரிப்பாளர் கே.ராஜான், பல பிரச்சனைகளை கூறினார். இதுவெல்லாம் கடந்து போகும், ஆனால் இதற்காக நாம் சண்டை போட கூடாது. எல்லமே நம்ம சகோதர்கள் தான், எனவே எதையும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம்.

 

நான்கு பசங்கள பார்த்ததும் நம்ம அலைகள் ஓய்வதில்லை போல இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால், இது வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றுகிறது. உள்ளே என்ன வைத்திருக்கிறார்கள், என்று தெரியவில்லை. ஆனால், நான்கு பசங்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள், அவர்கள் முகத்தில் ஒரு தேஜஸ் தெரிகிறது. நல்ல சிரித்த முகம், நிச்சயம் வெற்றி பெறுவார்கள். இங்கு இவ்வளவு பேர் வந்து வாழ்த்தியதே பெரிய விஷயம்.  நிச்சயம் படமும், ஹீரோவும் பெரிய வெற்றி பெறுவார்கள். இந்த இடத்தில் இவரை ஒரு ஹீரோவாக அப்பாவும், அம்மாவும் நிறுத்தியிருக்கிறார்கள். இது மிகப்பெரிய விஷயம். நிலம் நீர் காற்று இந்த மூன்றும் நம்மை வாழ வைக்கிறது. இவற்றுக்கு பிறகு அப்பா, அம்மா தான் நம்மை வாழ வைக்கிறார்கள். எனவே அவர்களை மறக்க கூடாது. படம் பெயர் கம்பெனி கிழக்கிந்திய கம்பெனி போல மிகப்பெரிய கம்பெனியாக படம் வெற்றி பெறும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

நிகழ்ச்சியின் முடிவில் இயக்குநர் பாரதிராஜா இசை குறுந்தகடை வெளியிட, மற்ற விருந்தினர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

Related News

8160

திருப்பதி லட்டு விவகாரம்! - மனம் திறந்த ரீல் வெங்கடாஜலபதி யூத் சூப்பர் ஸ்டார் ஆர்யன் ஷாம்
Saturday October-05 2024

திருப்பதி லட்டு விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருப்பது ஒரு பக்கம் இருக்க, அது குறித்த கேள்விகளுக்கு திரை பிரபலங்கள் பதிலளிக்க மறுத்து எஸ்கேப் ஆகும் நிலையில், திரையில் திருப்பதி வெங்கடாஜலபதியாக வாழ்ந்து மக்களின் மனங்களில் இடம் பிடித்ததோடு, திருப்பதி தேவஸ்தானத்தால் யூத் சூப்பர் ஸ்டார் என்ற பெட்டம் பெற்ற நடிகர் ஆர்யன் ஷாம், திருப்பதி லட்டு விவகாரம் குறித்த தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்...

’ஆலன்’ மக்கள் மனதில் அன்பை விதைக்கும் ஒரு படைப்பு! - பிரபலங்கள் பாராட்டு
Saturday October-05 2024

3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்...

ஏபிசி டாக்கீஸின் ‘தி பிக் ஷார்ட்ஸ் சாலஞ்’ (The Big Shorts Challenge) அறிவிப்பு!
Thursday October-03 2024

சுயாதீன திரைப்பட படைப்பாளிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முன்னோடி வெளிப்படையாக அணுகக்கூடிய ஓடிடி (OTT) திரைப்பட ஸ்ட்ரீமிங் தளமான ஏபிசிடாக்கீஸ், அதன் முதன்மை முயற்சியின் நான்காவது பதிப்பான ‘தி பிக் ஷார்ட்ஸ் சாலஞ்’ (The Big Shorts Challenge) தமிழ் பதிப்பை அறிவித்துள்ளது...

Recent Gallery