இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில், தமிழ்-தெலுங்கு மொழியில் உருவாகும் ’தி வாரியர்’ திரைப்படத்தில் ஒரு சிறப்பு பாடலை கோலிவுட் முன்ணனி நடிகர் சிம்பு பாடியுள்ளார்.
“புல்லட்” பாடலை தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார், இந்த பாடல் ஒரு சக்திமிக்க பாடலாக, கேட்பவர் ரசிக்கும் விதமாக இருக்கும் என்பதில் படக்குழு உறுதியாக உள்ளனர்.
ராம் பொத்தினேனி, லிங்குசாமி மற்றும் தேவி ஶ்ரீ பிரசாத் உடைய நண்பரான நடிகர் சிம்பு தமிழில் பல பாடல்களை பாடியுள்ளார். தற்போது அவரது சிறப்பான பங்களிப்பை ‘தி வாரியர்’ படத்தின் புல்லட் பாடலுக்கு அளித்துள்ளார்.
இந்த மாஸ் பாடல் படத்தின் முக்கியமான ஒன்றாக இருக்கும், இப்படம் ஜூலை 14 உலகமெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரபலமான ஆதி பினிஷெட்டி , தி வாரியர் படத்தில் வில்லனாகவும், தென்னிந்தியாவின் வளர்ந்து வரும் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்கள்.
RAPO19 என அழைக்கப்பட்ட படத்தன் பெயர் மற்றும் டைடில் லுக் சமீபத்தில் போஸ்டருடன் வெளியிடபட்டது. போஸ்டரில் ராம் பொத்தினேனி, போலீஸ் ஆபிசர் உடையில், காவலர்கள் சூழ துப்பாக்கியுடன் இருக்க, தி வாரியர் என்ற தலைப்புடன் போஸ்டர் வெளியிடப்பட்டது.
காதலர் தினத்தன்று, படத்தின் ஹீரோயின் கிரித்தி ஷெட்டி உடைய பர்ஸ்ட் லுக் பிப்ரவரி 14 அன்று வெளியானது. விசில் மஹாலட்சுமி என்ற பெயரில் ட்ரெண்டியான லுக்கில் கிரித்தி ஷெட்டி அதில் இடம்பெற்றிருந்தார். மகா சிவராத்திரி அன்று நடிகர் ஆதி உடைய பர்ஸ்ட் லுக் வெளியானது.
படம் குறித்து படக்குழு கூறியதாவது, “இப்படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வதோடு, தென்னிந்திய சினிமாவில் ஒரு முக்கியமான காவல்துறை பற்றிய கதையாக இருக்கும். ஐஸ்மார்ட் சங்கர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படம் ‘தி வாரியர்’. இப்படத்தில் அக்ஷரா கௌடா ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.” என்றனர்.
Srinivasaa Silver Screen பேனர் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கிறார், ‘தி வாரியர்’ திரைப்படம் தயாரிப்பு நிறுவனத்தின், சீட்டிமார் என்ற ஸ்போர்ட்ஸ் டிராமா படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் மகுடத்தில் மேலும் ஒரு சிறகாக இருக்கும் என படக்குழு எதிர்பார்க்கின்றனர்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...