பிரபுதேவா ஹீரோவாக நடித்திருந்த ‘மனதை திருடி விட்டாய்’ படத்தில் வடிவேலு மற்றும் விவேக் கூட்டணி காமெடியில் கலக்கியிருப்பார்கள். அதிலும் வடிவேலு அந்த படத்தில் பாடிய “சிங் இன் தி ரெயின்...” பாடப் செம ஹிட். அந்த பாடலையும், அப்படத்தின் காமெடிக் காட்சிகளை இன்றும் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வருகிறார்கள். எத்தனை முறை பார்த்தாலும், அடக்க முடியாத சிரிப்பை வரவைக்க கூடியவை அப்படத்தின் காமெடி காட்சிகள்.
இந்த நிலையில், “சிங் இன் தி ரெயின்...” பாடலை மீண்டும் பிரபுதேவாவுடன் இணைந்து வடிவேலு பாடியிருக்கிறார். இந்த வீடியோவை பிரபுதேவா தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட இன்றைய டிரெண்டிங்கே அந்த வீடியோ தான்.
இப்படி சிறு வீடியோவுடன் இந்த கூட்டணி நின்றுவிடவில்லை. வடிவேலு ஹீரோவாக நடிக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு பிரபுதேவா தான் நடனம் அமைக்கிறார்.
தமிழில் மிகப்பிரமாண்ட படைப்புகளை வழங்கி வரும் லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு வைகைப்புயல் வடிவேலு நாயகனாக நடித்து வரும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழ் மக்களின் வாழ்வில் இரண்டற கலந்தவர் வைகைப்புயல் வடிவேலு, அவரது காமெடி இல்லாத வீட்டு திரையே தமிழ்நாட்டில் கிடையாது. இணைய உலகமே அவரது காமெடியில் தான் இயங்கி வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் நாயகனாக நடிக்கும் , ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் அறிவிப்பு வெளியான போதே படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது. படத்தின் டைட்டிலோடு வெளியான மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் மிக அட்டகாசமான செய்தி வந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை, மைசூர் முதலான பகுதிகளில் நடத்தப்பட்டது. தற்போது சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் மிக பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு, மும்பை நடன கலைஞர்கள் பங்கேற்க, கோலகலமாக ஒரு பாடல் படமாக்கப்பட்டு வருகிறது. இந்திய நடன மேதை நடிகர் இயக்குநர் பிரபுதேவா இப்பாடலுக்கு நடனம் அமைக்கிறார். வில்லு படத்தை தொடர்ந்து 14 வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா மற்றும் நடிகர் வடிவேலு கூட்டணி இப்பாடலில் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடதக்கது. படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் தயாரிப்பு பணிகள் லைகா புரடக்சன்ஸ் தலைமை அதிகாரி ஜி.கே.எம்.தமிழ்குமரன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...